ஐபோன் 7 ரகிசய புகைப்படம் மற்றும் வெளியீட்டுத் தேதி கசிந்துள்ளது.!!

Written By:

செப்டம்பர் மாதம் நெருங்கி வரும் வேலையில் புதிய ஐபோன் சார்ந்த தகவல்கள், செய்திகள் அதிகளவு பரப்பப்படுகின்றன. பல்வேறு புதிய புகைப்படங்கள், வடிவமைப்பு மற்றும் புதிய அம்சங்கள் கருவி குறித்த எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளன.

அடுத்த வாரம் அதாவது செப்டம்பர் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் குறித்து இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்கள் ஸ்லைடர்களில்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வெளியீட்டு

ஆப்பிள் சார்ந்த தகவல்களைத் துல்லியமாக வழங்குவதில் பெயர் பெற்ற எவான் பிளாஸ் புதிய ஐபோன் கருவிகள் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்பதிவு

ஆப்பிள் ஸ்டோரின் ஆன்லைன் முறையில் புதிய கருவிகளுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் துவங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிமுகம்

புதிய ஐபோன் கருவிகளின் அறிமுக விழா செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி நடைபெறலாம் என்றும் ஆப்பிள் பங்குகள் குறைந்திருக்கும் நிலையில் அந்நிறுவனம் புதிய கருவிகளுக்கான முன்பதிவுகளை விரைவில் துவங்கலாம் என எவான் பிளாஸ் தெரிவித்துள்ளார்.

புகைப்படம்

ஆப்பிள் நிறுவனத்தின் வெளியே முதல் முறையாக புதிய ஐபோன் கருவிகள் காணப்பட்டுள்ளன. தாய்வானைச் சேர்ந்த பாப் ஸ்டார் ஜிம்மி லின் புதிய கருவியை பயன்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

டூயல் கேமரா

வெளியாிகியிருக்கும் புகைப்படத்தில் ஏற்கனவே கசிந்த அம்சங்களை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. இந்தப் புகைப்படத்தில் புதிய ஐபோன் 7 கருவியில் டூயல் கேமரா செட்டப் காணப்படுகின்றது.

பிராசஸர்

முந்தைய ஐபோன்களை விட அதிக சக்தி வாய்ந்த பிராசஸர் வழங்கப்படுவதோடு பேட்டரி பேக்கப் திறனை அதிகரிக்கும் அம்சங்கள் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

ஃபோர்ஸ் டச்

புதிய ஐபோன் கருவியின் தொடுதிரை அனுபவத்தை மேம்படுத்த ஃபோர்ஸ் டச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சார்ஜிங்

ஐபோன் 7 கருவியில் வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் ஹெட்போன் போன்றவை வழங்கப்படும் என இதுவரை வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டது.

மெமரி

வழக்கமாகக் குறைந்த அளவு மெமரியை 16 ஜிபியில் இருந்து ஆப்பிள் நிறுவனம் இந்தக் கருவிகளில் 32 ஜிபியாக உயர்த்த இருக்கின்றது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு முன்பை விட அதிகளவு மெமரி கிடைக்கும்.

வீடியோ

ஐபோன் 7 கருவி இப்படி தான் இருக்கும் என வெளியான வீடியோ.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
iPhone 7 Launch date Confirmed with new leaked Images Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்