செப்டம்பர் 12 இரண்டு மட்டும் தான் : இது தான் ஆப்பிள் திட்டமா??

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகள் இன்னும் இரண்டு மாதங்களில் நிச்சயம் வெளியாகிவிடும் என்ற நிலையில் இந்தக் கருவிகள் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகின்றன.

செப்டம்பர் 12 இரண்டு மட்டும் தான் : இது தான் ஆப்பிள் திட்டமா??

ஆப்பிள் குறித்த தகவல்களைச் சரியாக கணிப்பவர்களில் ஒருவரான @evleaks ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியாகலாம் எனத் தெரிவித்துள்ளார். உண்மையில் ஆப்பிள் கருவிகள் இந்தத் தேதியில் வெளியாகுமா, இந்தக் கருவியில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் குறித்த சில விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..

மெமரி

மெமரி

வழக்கமாகக் குறைந்த அளவு மெமரியை 16 ஜிபியில் இருந்து ஆப்பிள் நிறுவனம் இந்தக் கருவிகளில் 32 ஜிபியாக உயர்த்த இருக்கின்றது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு முன்பை விட அதிகளவு மெமரி கிடைக்கும்.

நீட்டிப்பு

நீட்டிப்பு

மேலும் அதிகபட்ச மெமரியை 256 ஜிபி வரை நீட்டிக்கலாம், முன்னதாக 128 ஜிபி வரை வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் படி வெளியான தகவல்களின் படி ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் கருவிகளில் 32, 64 மற்றும் 256 ஜிபி வரை இன்டர்னல் மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

ஆன்டெனா

ஆன்டெனா

ஐபோன்களின் பின்புறம் காணப்படும் ஆன்டெனா பேன்டுகள் புதிய கருவியில் நீக்கப்படலாம். பல முறை ரகசியமாய் கசிந்த படங்களில் ஆன்டெனா பேன்டு இல்லாத கருவிகளே காணப்பட்டன. மேலும் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களும் இதனை உறுதி செய்திருக்கின்றன.

கனெக்டர்

கனெக்டர்

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளில் ஐபேட் ப்ரோ கருவியில் வழங்கப்பட்டதைப் போன்ற ஸ்மார்ட் கனெக்டர் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது. எனினும் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பது கேள்வி குறியாகவே இருக்கின்றது.

ஹெட்போன் ஜாக்

ஹெட்போன் ஜாக்

சில காலமாகவே 2016 ஆப்பிள் கருவிகளில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்படமாட்டாது என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான புகைப்படங்களிலும் இதை நிரூபிக்கும் வடிவமைப்புகளே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டூயல் கேமரா

டூயல் கேமரா

ஐபோன் 7 கருவியில் ஒற்றை லென்ஸ் கொண்டிருக்கும் என்றாலும், ஐபோன் 7 பிளஸ் கருவியில் டூயல் கேமரா செட்டப் வழங்கப்படலாம் என்றே கூறப்படுகின்றது. இதன் மூலம் புகைப்படங்களின் தரம் மேலும் அதிகரிக்கும். இதோடு கேமரா அம்சங்களை புதுப்பித்து வேகமான ஆட்டோ ஃபோகஸ் வசதி போன்றவை வழங்கப்படலாம்.

ஃபோர்ஸ் டச்

ஃபோர்ஸ் டச்

சமீபத்தில் வெளியான தகவல்களில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளில் ஃபோர்ஸ் டச் தொழில்நுட்பம் கொண்ட ஹோம் பட்டன் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

மியூட் பட்டன்

மியூட் பட்டன்

வழக்கமாக ஐபோன் கருவிகளின் வால்யூம் பட்டன்களுக்கு மேல் வழங்கப்படும் மியூட் பட்டன் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளில் இருக்காது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேட்டரி

பேட்டரி

ஐபோன் 7 கருவியில் 1960 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக 1715 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரிகள் வழங்கப்பட்டது.

மாற்றம்

மாற்றம்

முந்தைய கருவிகளில் இல்லாமல் புதிய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளில் OLED டிஸ்ப்ளே, கைரேகை ஸ்கேனர் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வீடியோ

ஐபோன் 7 குளோன் : வெளியான வீடியோ

Best Mobiles in India

English summary
iPhone 7, iPhone 7 Plus Expected to Launch in September 12 Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X