வேகவைத்தாலும் வேலை செய்யும் ஐபோன் : வைரலாகும் வீடியோ??

புதிய ஐபோனினை கொதிக்கும் நீரில் வேக வைக்கும் வீடியோ இண்டர்நெட்டில் வைரலாகியுள்ளது. இது உண்மையா, அல்லது பொய்யா.?

Written By:

உலக டெக் சந்தையில் அதிகப் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவிகள் வெளியாகும் முன் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். பின் கருவி வெளியானதும் அதன் சோதனைகள் உலகெங்கும் நடத்தப்படும்.

யூட்யூபில் ஐபோன் டார்ச்சர் டெஸ்ட் என டைப் செய்தால் நீங்களே அதிர்ந்து போகுமளவு புதிய ஐபோன்களைக் கண்டபடி டார்ச்சர் செய்திருப்பர். இங்கு ஒருவர் புதிய ஐபோன் வாட்டர் ப்ரூப் என்பதால் கொதிக்கும் நீரில் அதனை வேக வைக்கிறார். அதன் பின் என்னவாகிறது என்பதை இங்குப் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வீடியோ

டெக்ராக்ஸ் எனும் யூட்யூப் சேனலில் தான் ஐபோன் வேக வைக்கப்படும் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ செப்டம்பர் 16 ஆம் தேதியன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொதிக்கும் நீர்

நன்கு வேலை செய்யும் புத்தம் புதிய ஐபோன் 7 கொதிக்கும் நீரில் அப்படியே போடப்படுகிறது. பின் சிறிது நேரத்தில் ஐபோன் திரை ஆஃப் ஆகிக் கொஞ்ச நேரம் கருவி அப்படியே இருக்கிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெப்பம்

பின் சிறிது நேரம் கழித்து ஐபோன் வெளியே எடுக்கப்பட்டதும் ஐபோன் திரையில் கருவி அதிகச் சூடாக இருக்கிறது, குளிர்ந்த பின் நீங்கள் இதனைப் பயன்படுத்த முடியும் என்ற தகவல் தெரிகிறது.

கேமரா

வெளியே எடுக்கப்பட்ட கருவி சிறிது நேரம் கழித்து அனைத்து அம்சங்களும் சோதிக்கப்படுகிறது. இதில் கேமரா நன்கு வேலை செய்வது தெரிகிறது. மற்ற அம்சங்களும் சீராக இயங்குகிறது.

உண்மையா

ஐபோன் 7 வாட்டர் ப்ரூப் அம்சம் கொண்டுள்ளது என்றாலும் கொதிக்கும் நீரில் போட்ட பின்பும் வேலை செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வீடியோ

ஐபோன் 7 கொதிக்கும் நீரில் போடப்படும் வீடியோவினை பாருங்கள்..

 

குறிப்பு: வீடியோ பார்த்து யாரும் உங்களது கருவியினைக் கொதிக்கும் நீரில் போட்டு முயற்சிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
iPhone 7 Boiling Hot Water Durability Test video is viral online
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்