கல்லா கட்டும் கள்ள சந்தை, டல்லடிக்கும் ஆப்பிள் விற்பனை..!!

By Meganathan
|

எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை மட்டுமே தரும் என்பதை விளக்கும் மற்றும் ஓர் சம்பவம் தான் உலகளவில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. எதையாவது விசித்திரமாக செய்வது, பல முறை எதையும் செய்யாமலே செய்திகளில் சிக்கும் ஆப்பிள் நிறுவனம் தான் இம்முறை ஏமாந்திருக்கின்றது என்கின்றது இணையத்தை சுற்றி வரும் தகவல்கள்.

வழக்கத்தை மாற்றி புதிய ஐபோன் கருவிகளை ஆப்பிள் நிறுவனம் மிகவும் சீக்கிரமாகவே இந்தியாவில் வெளியிட்டது. வழக்கத்தை விட அதிக விற்பனையை எதிர்பார்த்த நிறுவனத்திற்கு மிஞ்சியது ஏமாற்றமே...

மவுசு

மவுசு

இந்தியாவில் வெளியாகும் முன்பே இந்தியாவின் சந்தைகளை ஆக்கிரமித்த புதிய ஐபோன் கருவிகள், அச்சமயத்தில் சுமார் 1 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது.

விற்பனை

விற்பனை

வழக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஆப்பிள் கருவிகள் இந்தியாவில் எதிர்பார்த்து அளவு விற்பனையாகவில்லை என்றே தெரிகின்றது.

விலை

விலை

குறைந்த விலைக்கு பெயர் போன இந்திய சந்தையில் அதிக விலை நிர்ணயித்ததே ஆப்பிள் கருவிகளின் மந்தமான விற்பனைக்கு காரணமாக கூறப்படுகின்றது.

உயர்வு

உயர்வு

மும்பையின் ஹீரா பன்னா, புது தில்லியின் கஃப்பார் சந்தை, மற்றும் கொல்கத்தாவின் ஃபேன்ஸி மார்க்கெட் உள்ளிட்ட கல்ல சந்தைகளில் புதிய ஐபோன் கருவிகளின் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக இந்தியாவின் பிரபல வர்த்தக நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைவு

குறைவு

கல்ல சந்தைகளில் முன்பு 1 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஐபோன் கருவிகளின் விலை தற்சமயம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைப்பட்டியல்

விலைப்பட்டியல்

அதன் படி புதிய ஐபோன் 6எஸ் 16ஜிபி விலை ரூ.53,000, 64ஜிபி ரூ.62,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகள் 16 ஜிபி ரூ.64,000 மற்றும் 64ஜிபி ரூ.64,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு கருவிகளில் வாரண்டி இல்லை என்றும் வாரண்டியுன் விலை சற்று அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

விலை

விலை

அதன் படி கல்ல சந்தையில் வாரண்டியுடன் ஐபோன் 6 16ஜிபி ரூ.60,000 மற்றும் 64ஜிபி ரூ,70,000 என்றும், ஐபோன் 6எஸ் 16ஜிபி ரூ. 70,000 என்றும் 64ஜிபி ரூ.64,000 என நிர்ண்யிக்கப்பட்டுள்ளது.

ஈபே

ஈபே

இதே போன்று ஈபே தளத்தில் ஐபோன் 6எஸ் 16ஜிபி ரூ.53,153 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது, இது கிட்டத்தட்ட ரூ.9000 குறைவு ஆகும். ஐபோன் 6எஸ் 64 ஜிபி விலை ரூ.60,351, ஐபோன் 6எஸ் ப்ளஸ் 64ஜிபி ரூ.72,072 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உண்மை விலை

உண்மை விலை

அதிகாரப்பூர்வமாக வர்த்தக நிறுவனங்களிடம் ஐபோன் 6எஸ் 16ஜிபி, 64ஜிபி மற்றும் 128ஜிபி விலை முறையே ரூ.62,000, ரூ.72,000, ரூ.82,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6எஸ் ப்ளஸ் 16ஜிபி, 64ஜிபி மற்றும் 128ஜிபி விலை முறையே ரூ.72,000, ரூ.82,000 மற்றும் ரூ.92,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு காரணம்

அரசு காரணம்

ஆப்பிள் நிறுவனம் இத்தகைய விலையை நிர்ணம் செய்திருப்பதற்கு மத்திய அரசின் வரி உயர்த்தப்பட்டதே முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.

விற்பனையாளர்கள்

விற்பனையாளர்கள்

எது எப்படியோ கல்ல சந்தையில் ஆப்பிள் கருவிகள் அதிகம் விற்பனையாவது, விற்பனையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
iphone 6s Grey market rejoices as official price is too high. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X