காப்பி அடித்த ஆப்பிள் : அம்பலமான பகீர் தகவல்கள்..!?

By Meganathan
|

புதிய திரைப்படம் வெளியாகும் போது, படம் நல்லா இருக்கு, நல்லா இல்லை என பல விமர்சனங்கள் எழுவது சகஜமான ஒன்று தான். திரைப்படங்களை கடந்து உலகம் முழுவதும் விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளை பெற்று வருகின்றது உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள்.

ஆப்பிள் பிரச்சனைகள் விரிவான தகவல்கள்..!!

செப்டம்பர் 9 ஆம் தேதி சில கருவிகளை வெளியிட்ட அந்நிறுவனம் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பட்டியல் ஒன்று வெளியாகி தொழில்நுட்ப சந்தையை உலுக்கி வருகின்றது.

அறிமுகமான ஆப்பிள் கருவிகள்..!!

ஐபோன் 6எஸ்

ஐபோன் 6எஸ்

அதன் படி வெளியாகி இருக்கும் தகவல்கள் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6எஸ் கருவியில் வழங்கி இருக்கும் சிறப்பம்சங்கள் திருடப்பட்டவை என்கின்றது.

3டி டச்

3டி டச்

ஆப்பிள் 3டி டச் வாடிக்கையாளர்களை தொடு திரையில் கொடுக்கும் அழுத்தங்களுக்கு ஏற்ப அம்சங்களை வழங்கும். இந்த அம்சம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ் மற்றும் மேக்புக் கருவிகளிலும் வழங்கி இருக்கின்றது.

ப்ளாக்பெரி

ப்ளாக்பெரி

இதே போன்ற மல்டி லெவல் டச் அம்சத்தினை ப்ளாக்பெரி நிறுவனம் ஸ்டார்ம் 2 கருவியில் வழங்கி இருந்ததோடு, மேட் எஸ் எனும் புதிய கருவியில் ஹூவாய் நிறுவனமும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் போட்டோ

லைவ் போட்டோ

ஐபோன் கேமராவின் புதிய அம்சமான லைவ் போட்டோ க்ளிக் செய்யும் முன் மற்றும் பின்பும் புகைப்படங்களை எடுத்து அதை அனிமேஷன் புகைப்படமாக மாற்றும்.

எச்டிசி

எச்டிசி

இது போன்ற அம்சம் எச்டிசி கருவிகளில் ஸோ என அழைக்கப்பட்டிருந்தது, மேலும் மைக்ரோசாப்ட் லூமியா கருவிகளிலும் லைவிங் இமேஜ் எனும் அம்சம் வழங்கி இருந்தது.

4கே வீடியோ

4கே வீடியோ

ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளில் அதிக ரெசல்யூஷன் (3840*2170பி) வீடியோக்களை பதிவு செய்யும் திறன் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

ஆனால் 4கே ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்யும் திறன் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு கருவிகளில் வழங்கப்படுகின்றது. குறிப்பாக சோனி எக்ஸ்பீரியா இசட்3 மற்றும் எல்ஜி ஜி3 போன்ற கருவிகள் இந்த அம்சத்தினை 2014 ஆம் ஆண்டே வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ப்ளேபேக் சூம்

ப்ளேபேக் சூம்

ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளில் வீடியோக்களை பார்க்கும் போதே அவைகளை சூம் செய்யும் திறன் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங்

சாம்சங்

இந்த அம்சம் சாம்சங் கேலக்ஸி மற்றும் பல ஆண்ட்ராய்டு கருவிகளில் வழங்கப்பட்டிருப்பதோடு சில செயலிகளும் இந்த அம்சத்தினை வழங்குகின்றது.

ரெட்டினா ப்ளாஷ்

ரெட்டினா ப்ளாஷ்

புதிய ஐபோன்களில் 5எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டாலும் அவைகளில் முன்பக்க ப்ளாஷ் இல்லை, இதை ஈடு செய்யவே அந்நிறுவனம் ரெட்டினா ப்ளாஷ் எனும் அம்சத்தினை வழங்கியுள்ளது. இதன் மூலம் இருட்டில் செல்பீ எடுக்கும் போது திரையின் ப்ரைட்னஸ் அதிகமாகி ப்ளாஷ் போன்று செயல்படுகின்றது.

செயலி

செயலி

இந்த அம்சத்தை அனைத்து செயலிகளிலும் பயன்படுத்த முடியும், இதற்கு ப்ரன்ட் ப்ளாஷ் போன்ற செயலிகளே போதுமானது.

சிரி

சிரி

ஆப்பிள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவையான சிரி புதிய கருவிகளில் ஹே சிரி ‘Hey Siri' என்றவுடன் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள்

கூகுள்

கூகுள் நௌ மற்றும் மைக்ரோசாப்ட் லூமியா கருவிகளில் இருக்கும் கார்டனா போன்றவை இந்த அம்சத்தினை வழங்குகின்றன.

அலுமினியம்

அலுமினியம்

புதிய ஐபோன் கருவிகள் விமானங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்6

சாம்சங் கேலக்ஸி எஸ்6

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ் கருவிகளும் இதே அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
IPhone 6S Features Taken From Other Phones. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X