ஐபோன் 7 வெளியீடு : ஆப்பிள் கருவிகள் விலை குறைக்கப்பட்டன.!!

Written By:

உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபோன் 7 வெளியாகிவிட்டது. ஆப்பிள் நிறுவனம் இம்முறை ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், மற்றும் ஆப்பிள் வாட்ச் 2 கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப் போல் 16 ஜிபி மெமரி நீக்கப்பட்டு மெமரி அளவுகள் 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 7 வெளியீடு : ஆப்பிள் கருவிகள் விலை குறைக்கப்பட்டன.!!

ஐபேட் வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும் ஐபேட் கருவிகளுக்கான குறைந்த பட்ச மெமரி அளவு 32 ஜிபியாக இருக்கின்றது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் 32 ஜிபி கருவிகளின் விலை 16 ஜிபி மாடல் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படுகின்றன. மேலும் ஐபேட்-ப்ரோ கருவிகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளன.

ஐபோன் 7 வெளியீடு : ஆப்பிள் கருவிகள் விலை குறைக்கப்பட்டன.!!

அதன் படி தற்சமயம் ஐபேட் மினி 2 (32 ஜிபி) மற்றும் ஐபேட் மினி 4 (32 ஜிபி / 128 ஜிபி) மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. 128 ஜிபி ஐபேட் ப்ரோ தற்சமயம் சுமார் $50 வரை குறைவாகவும், 256 ஜிபி விலை $100 வரை குறைவாகவும் இருக்கின்றது. இந்த விலை மாற்றங்கள் இந்தியாவில் மிக விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
iPad Pro gets a price cut post iPhone 7 launch Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்