காப்பியடித்த ஆப்பிள் ! பல ஆண்ட்ராய்டு அம்சங்களை புதிய ஓஎஸ் இல் வழங்கி இருக்கின்றது

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை இயங்குதளத்தினை ஜூன் 8 ஆம் தேதி நடைபெற்ற (WWDC) உலகளவிலான டெவலப்பர் மாநாட்டில் அறிவித்தது.

டச் ஸ்கிரீன் ஸ்க்ராட்ச் ஆகிவிட்டதா, இனி கவலை வேண்டாம் பாஸ்..

வடிவமைப்பில் அதிக மாற்றங்களை செய்யாமல் அந்நிறுவனம் சில புதிய சிறப்பம்சங்களையும் சில அப்கிரேடுகளையும் வழங்கி உள்ளது. புதிய இயங்குதளத்தின் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக சில சிறப்பம்சங்கள் இருக்கின்றது.

கொசு இனத்தையே அழிச்சிடலாம் வாங்க !

அதன்படி ஆப்பிள் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பல காலமாக புழக்கத்தில் இருக்கும் சில அம்சங்களை தான் வழங்கி இருக்கின்றது. தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இருக்கும் புதிய ஐஓஎஸ்9 சிறப்பம்சங்களை பாருங்கள்..

ப்ரோஆக்டிவ் அசிஸ்டன்ட்

ப்ரோஆக்டிவ் அசிஸ்டன்ட்

ஐஓஎஸ் 9 வாடிக்கையாளர்களுக்கு அறிவு சார்ந்த சிறப்பம்சமாக ப்ரோஆக்டிவ் அசிஸ்டன்ட் ஆப்ஷனை வழங்கி இருக்கின்றது. இந்த அம்சமானது நீங்கள் திட்டமிட்டிருக்கும் வேலைகளை முன்கூட்டியே நினைவு படுத்தும்.

லோ பவர் மோடு

லோ பவர் மோடு

ஐஓஎஸ் 9 இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருக்கும் லோ பவர் மோடு ஐபோன் பேட்டரியை 3 மணி நேரம் வரை அதிகரிக்க செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ப்லிட் வியூ

ஸ்ப்லிட் வியூ

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ப்லிட் வியூ ஸ்கிரீன் அம்சத்தினை ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 9 இல் வழங்கி இருக்கின்றது. அதன் படி வாடிக்கையாளர்கள் திரையை இரண்டாக பிரித்து ஒரே சமயத்தில் இரு செயலிகளை பயன்படுத்த வழி வகுக்கும்.

பிக்சர்

பிக்சர்

பிக்சர் இன் பிக்சர் ஆப்ஷன் மூலம் வாடிக்கையாளர்கள் இனி மற்ற செயலிகளை பயன்படுத்தும் போது வீடியோ்களை சிறிய ஸ்கிரீன்களில் பார்க்க முடியும்.

நியுஸ் ஆப்

நியுஸ் ஆப்

ஆப்பிள் நிறுவனம் நியுஸ்ஸ்டான்டு அப்ளிகேஷனை புதிய நியுஸ் ஆப் மூலம் வழங்குகின்றது. இந்த செயலியானது மற்ற செய்தி நிறுவனங்களின் செய்திகளை ஒருங்கினைத்து முறையான செய்திகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஹான்ஸ்டு சர்ச்

என்ஹான்ஸ்டு சர்ச்

சிரி மூலம் அனைத்து வித தேடல்கள், மற்றும் செயலிகளை பயன்படுத்தவும் முடியும், இந்த ஆப்ஷன் கூகுள் நௌ பல காலமாக ஆண்ட்ராய்டில் வழங்கி வருகின்றது.

கீபோர்டு ஷார்ட்கட்

கீபோர்டு ஷார்ட்கட்

ஐஓஎஸ்9 இயங்குதளத்தின் புதிய க்விக்டைப் கீபோர்டு புதிய டூல்பார் மூலம் பல ஷார்ட்கட்களை வழங்குகின்றது. ஆண்ட்ராய்டில் இதே அம்சத்தினை பல செயலிகள் வழங்குகின்றது.

திசை

திசை

பல காலமாக குற்றச்சாட்டுகளை சந்தித்து வரும் ஆப்பிள் மேப்ஸ்கள் இனி பொது வழித்தடங்களை துள்ளியமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, கூகுள் மேப்ஸ் ஏற்கனவே இந்த அம்சத்தினை வழங்கி வருகின்றது அனைவரும் அறிந்ததே.

Best Mobiles in India

Read more about:
English summary
Here is a look at the new specifications of ios 9 what Apple borrowed from Android…

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X