இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் II ஹெச்டி ரூ.6,590க்கு வெளியானது

Written By:

இன்டெக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. புதிய இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் II ஹெச்டி ரூ.6,590க்கு விற்பனை செய்யப்பட இருப்பதோடு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்வா ஸ்டார் II ஹெச்டி டூயல் சிம் கொண்டு ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குகின்றது. மேலும் 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்பெரட்ரம் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

இன்டெக்ஸ் அக்வா ஸ்டார் II ஹெச்டி ரூ.6,590க்கு வெளியானது

மெமரியை பொருத்த வரை 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு ஃபேஸ் ரெகக்னீஷன், பானரோமா, ஜியோ டேகிங், ஹெச்டிஆர் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, வைபை 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இதோடு ஷாம்பெயின், சில்வர், வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கின்றது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Intex has launched a new budget Aqua-series smartphone, the Aqua Star II HD, priced at Rs. 6,590.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்