சிலிர்க்க வைக்கும் சியோமி.!!

Written By:

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனம் தான் சியோமி, இந்நிறுவனம் சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மாற்றாக கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை வடிவமைத்து, தயாரிப்பதோடு செயலி, பவர் பேங்க், பேன்டு மற்றும் கேமரா என பல்வேறு கருவிகளை சந்தையில் அறிவித்து வருகின்றது.

சிறிய இடைவெளியில் உலகின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக உருவாகியிருக்கும் சியோமி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

அர்த்தம்

சியோமி என்றால் புத்த கருத்தியல் படி அரிசி என அர்த்தமாகும், மி என்றால் மொபைல் போன் என்ற வார்த்தையின் சுருக்கம் ஆகும்.

தரம்

சியோமியின் எளிய வடிவமைப்பு, நேர்த்தியான தரம், போன்றவை சீனாவின் ஆப்பிள் என்ற பெருமையை வழங்கி இருக்கின்றது என்றே கூற வேண்டும்.

பொறுப்பு

சியோமி நிறுவனத்தின் மூத்த பொறுப்புகளில் முன்னாள் கூகுள் ஊழியர்களே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடம்

உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் மூன்றாவது மற்றும் ஆசியாவின் ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனங்களில் முதலிடத்தையும் சியோமி நிறுவனம் பெற்றிருக்கின்றது.

ஆன்லைன்

சியோமி நிறுவனம் தனது கருவிகளை பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே விற்பனை செய்கின்றது.

விளம்பரம்

சியோமி நிறுவனம் பாரம்பரிய விளம்பர முறைகளை பயன்படுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி

உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சியோமியும் இடம் பிடித்திருப்பதோடு இந்நிறுவனம் கிட்டத்தட்ட சுமார் 150% வளர்ச்சியை அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவக்கம்

சியோமி கருவிகள் முதற்கட்டமாக அமெரிக்கா, ஐரோப்பாவில் துவங்கி இன்று உலகம் முழுக்க சியோமி கருவிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

அழகு

சியோமி நிறுவனத்தின் அனைத்து கேமராக்களிலும் பயனாளிகளை அழகாக காட்டும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Interesting facts about Xiaomi that you should know. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்