செவ்வாய் பற்றிய சில உண்மைகள்: உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..!

Written By:

நம்மில் பலருக்கு - செவ்வாய் கிரகம் என்பது சூரியனிலிருந்து நான்கவதாக இருக்கும் கோள், இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுவதால் இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது - என்ற இந்த இரண்டு விடயங்களைத் தவிர்த்து செவ்வாய் கிரகம் பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ஒருவேளை நீங்கள் வானவியல் அறிஞராக இல்லாவிடில்)..!

நாளுக்கு நாள் மாபெரும் சுவாரசியங்களை கட்டவிழ்த்து கொண்டிருக்கும் செவ்வாய் கிரகம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத 'சில' உண்மைகள் பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

காலம் :

செவ்வாய் கிரகம் முதன் முதலில் குறிப்பில் பதிவு செய்யப்பட்ட காலம் : கி.மு 2 ஆம் நூற்றாண்டு.
பதிவு செய்தவர்கள் : எகிப்திய வானியல் அறிஞர்கள்.

இரண்டு நிலாக்கள் :

இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு மொத்தம் இரண்டு நிலாக்கள் கண்டறியப்பட்டுள்ளது.
அதன் பெயர்கள் : தெய்மொசு மற்றும் போபொசு (Phobos & Deimos)

ஒரு முறை :

செவ்வாய் கிரகத்தை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளப்படும் காலம் : 687 நாட்கள்.

நிலப்பகுதி :

பூமியின் நிலப்பகுதியும் (Land mass) செவ்வாய் கிரகத்தின் நிலப்பகுதியும் கிட்டத்தட்ட சமம் தான்.

மலை :

சூரிய குடும்பத்தில் இருக்கும் மலைகளிலேயே மிக உயரமான மலை செவ் வாய் கிரகத்தில் தான் உள்ளது.
பெயர் : ஒலம்பஸ் மோன்ஸ் (Olympus Mons)
உயரம் : 21 கிமீ

தூசி புயல் :

சூரியக் குடும்பத்தில் மாபெரும் தூசி புயல்களை உள்ளடக்கியதும் செவ்வாய் கிரகம் தான். அவைகள் மாதக்கணக்கில் ஒட்டுமொத்த கிரகத்தையும் சூழ்ந்து வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.

கழிந்த பகுதி :

மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரக்தில் இருந்து கழிந்த பகுதிகள் பூமியில் விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரோமானியம் :

மேலைநாட்டவர்கள் ரோமானிய நாட்டு போர் கடவுளின் பெயரை தான் செவ்வாய்க்கு சூட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிங் :

சனி கோள் அதாவது சாட்டர்ன் கிரகத்திற்கு இருப்பது போன்ற 'ரிங்', செவ்வாய் கிரகத்திற்க்கும் உருவாகும். ஆனால் அதற்கு 20 - 40 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.

இடைவெளி :

பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்க்கும் உள்ள இடைவெளி : 54.6 மில்லியன் கிமீ.

புகைப்படத்தொகுப்பு :

செவ்வாய் கிரகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட விசித்திரங்களின் புகைப்படத்தொகுப்பை காண இங்கே கிளிக் செய்யவும்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Interesting Facts about the Planet Mars. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்