இந்தியாவில் வெளியானது பென்டிரைவ் வடிவில் கணினி..!

By Meganathan
|

இன்டெல் நிறுவனம் இன்டெல் கம்ப்யூட் ஸ்டிக் கருவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த கருவி ப்ளிப்கார்ட் மற்றும் இந்தியாவில் இருக்கும் அனைத்து இன்டெல் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளியானது பென்டிரைவ் வடிவில் கணினி..!

விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்டிக் ரூ.9,999க்கு ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் என்றும், லைனக்ஸ் வெர்ஷன் விலை இன்னும் குறிப்பிடப்படவில்லை. 1.83 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஆடம் குவாட்கோர் பிராசஸர் கொண்டிருக்கும் இந்த ஸ்டிக் கருவி எச்டிஎம்ஐ போர்ட் கொண்ட எவ்வித டிஸ்ப்ளே அல்லது மானிட்டர்களையும் கணினியாக மாற்றக்கூடியது.

இன்டெல் நிறுவனம் இரு வகை ஸ்டிக் கருவிகளை இந்தியாவில் வழங்குகின்றது, விண்டோஸ் 8.1 இயங்குதளம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி, 2ஜிபி ரேம் மற்றும் லைனக்ஸ் இயங்குதளம் உபுன்டு 14.04 இன்ஸ்டால் செய்யப்பட்டு 8ஜிபி மெமரியும், 1ஜிபி ரேமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெளியானது பென்டிரைவ் வடிவில் கணினி..!

இரு கருவிகளிலும் வை-பை 802.11bgn, ப்ளூடூத் 4.0, யுஎஸ்பி 2.0 போர்ட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இன்டெல் நிறுவனம் கணினி பயன்பாட்டினை புதிய வடிவில் மக்களுக்கு அளிப்பதோடு புதிய வகையானது இந்தியாவில் நிச்சயம் வெற்றி பெறும் என்று அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பரத்துறை தலைவர் ராஜிவ் பல்லா தெரிவித்தார்.

Best Mobiles in India

Read more about:
English summary
Intel has launched the Intel Compute Stick in India. It will be available online through Flipkart and at physical stores via Intel technology providers across India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X