கூகுள் க்ரோமில் புதிய இன்ஸ்டென்ஸ் டீத்தெரிங் அம்சம்.!

உடனடி டெத்தரிங் உங்கள் தொலைபேசிகளை வைபை ஹாட்ஸ்பாட் போன்றவற்றில் எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும்.!

By Prakash
|

க்ரோம் ஒஎஸ்-ல் இயங்கக்கூடிய க்ரோம்புக்ஸ் போன்ற சாதனங்களுக்கு உடனடி டீத்தெரிங்கிற்கான அதன் ஆதரவை கூகுள் தற்போது விரிவாக்க திட்டமிட்டுள்ளது. இப்போது வரை, தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் செய்யவில்லை, ஆனால் இந்த அம்சம் க்ரோம் ஒஎஸ்-இன் கேனரி சேனலில் வந்துவிட்டதுபோல் தெரிகிறது.

கூகுள் க்ரோமில் புதிய இன்ஸ்டென்ஸ் டீத்தெரிங் அம்சம்.!

உடனடி டெத்தரிங் உங்கள் தொலைபேசிகளை வைபை ஹாட்ஸ்பாட் போன்றவற்றில் எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும், அவை ஆண்ட்ராய்டு மற்றும பல சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

இந்த அம்சம் பிக்சல் அல்லது நெக்ஸஸ் போன்களைக் கொண்டிருந்தால் மட்டுமே க்ரோம்புக்ஸ் உரிமையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ரோம்புக்ஸ்-இன் நெட்வொர்க் அமைப்புகளில் உடனடி டீத்தெரிங் பட்டியலிடப்படும். அதன்பிறகுஇ நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அம்சத்தை இயக்கவும் முடக்கவும் முடியும். வெறுமனே க்ரோம் ஒஎஸ் கேனரி சேனலில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதை இயக்குவதற்கு 'உடனடி டீத்தெரிங் விருப்பத்தைத் தட்டவும்.

உங்கள் நினைவகத்தை புதுப்பிக்க, உடனடி டீத்தெரிங் அம்சம் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் அறிமுகப்படுத்தியது. கூகுள் பிக்சல் மற்றும் நெக்ஸஸ் பயனர்கள் மற்ற சாதனங்களுடன் தங்கள் மொபைல் இணைய தரவை பகிர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். வழக்கமாக, ஒரு தொலைபேசி மற்றும் ஒரு சாதனத்தின் இடையே இணைய தரவு பகிர்ந்து அதை பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Instant Tethering feature could make its way to Google Chromebooks soon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X