நம்புங்க பாஸ், இதுவும் தொழில்நுட்பம் தான்..!!

By Meganathan
|

தொழில்நுட்ப துறை : உலகெங்கும் இருக்கும் பல்வேறு அறிவாளிகளும், அதிமேதாவிகளும் தங்களது கற்பனையை மக்களுக்கு ஏற்ற விதத்தில் வடிவமைத்து கருவிகளாக சந்தையில் வெளியிடுகின்றனர். அவ்வாறு வெளியாகும் அனைத்து கருவிகளும் அனைவரிடத்திலும் சென்றைடகின்றதா என்றால் நிச்சயம் கிடையாது என்றே கூற வேண்டும்.

இங்கு தொழில்நுட்ப துறையில் வெளியாகியும் பலருக்கும் தெரிந்திராத தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அவைகளின் புகைப்படங்களை தான் தொகுத்திருக்கின்றோம். இவை தற்சமயம் இந்தியாவில் கிடைக்கவில்லை என்றாலும் வரும் ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 அலாரம்

அலாரம்

இது அலாரம் கடிகாரம் கொண்ட காபி இயந்திரம், தற்சமயம் உலகின் சிறந்த காபி இயந்திரமாக இந்த கருவி கருதப்படுகின்றது.

பாரசால்

பாரசால்

சூரிய வெளிச்சம் பட்டவுடன் தானாக விரிந்து கொள்ளும் குடை.

ஸ்பீக்கர்

ஸ்பீக்கர்

காற்றில் மிதக்கும் ப்ளூடூத் ஸ்பீக்கர் கருவி.

ஐஸ் ப்ரீஸ்

ஐஸ் ப்ரீஸ்

குளிர்பானங்களை குளிரூட்டுவதோடு இந்த ஐஸ் பெட்டி உங்களையும் குளிரூட்டும் என்பது தான் இதன் சிறப்பு.

ப்ளூஸ்மார்ட்

ப்ளூஸ்மார்ட்

இது தான் உலகின் அதிநவீன பயணபெட்டி, ஸ்மார்ட்போன் உடன் இணைந்து கொள்ளும் இந்த பெட்டியை நீங்கள் தொலைத்து விட்டாலும் அதனினை எளிதாக ட்ராக் செய்ய முடியும்.

ஹூஷ்

ஹூஷ்

மிகவும் அதிநவீன இயர்போன் தான் ஹூஷ், வெளியில் நடக்கும் எவ்வித சத்தத்தையும் கேட்காமல் இருக்க இவை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ரிடாட்

ரிடாட்

பார்க்க பேன்ட் போன்று காட்சியளிக்கும் இந்த கருவி நேரத்தினை கையில் ப்ரோஜெக்ட் செய்யும்.

அவோ

அவோ

மீன் தொட்டி போன்று காட்சியளிக்கும் இந்த கருவி உண்மையில் மீன் தொட்டி தான், ஆனால் இதை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டாம், சீரான இடைவெளியில் தானாகவே இந்த தொட்டி தன்னை சுத்தம் செய்து கொள்ளும்.

கூக்குன்

கூக்குன்

இந்த கருவி சிறியதாக காட்சியளித்தாலும் வீட்டினை பாதுகாக்க சிறப்பானதாக இருக்கும்.

எடின்

எடின்

வீட்டு தோட்டத்தை சிறப்பாக கண்கானிக்க இந்த கருவி பரிந்துரை செய்யும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Insanely Clever Products That Came Out In 2015. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X