பெருமாபாலான இந்தியர்கள் ஸ்மார்ட்போன் அடிமைகளாக உள்ளனர் - ஆய்வில் தகவல்

By Meganathan
|

உலகளவில் ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்தும் 5 நாடுகளை சேர்ந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 57% இந்தியர்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழ முடியாது என்று தெரிவித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த B2X கேர் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் ஸ்மார்ட்போன்களுக்கு முக்கியத்துவம் அளித்து தொலைகாட்சியை விட்டு கொடுக்க மூன்றில் ஒருவர் தயாராக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

  பெருமாபாலான இந்தியர்கள் ஸ்மார்ட்போன் அடிமைகளாக உள்ளனர்

அமெரிக்கா, ஜெக்மனி, பிரேசில், இந்தியா மற்றும் சீனா ஆகியா நாடுகளை சேர்ந்த சுமார் 2500 ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் பயனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 16 முதல் 65 வயதுடைய ஸ்மார்ட்போன் பயனாளிகளும் அடக்கம்.

[கூகுள் விற்பனை மேளா விற்பனை சிறப்பு சலுகை அளிக்கும் இணையங்கள்]

அமெரிக்காவில் 518, ஜெர்மனியில் 535, இந்தியாவில் 507, சீனாவில் 515 மற்றும் பிரேசிலில் 503 பேர் பதில் அளித்துள்ளனர். இவற்றில் அமெரிக்கா மற்றும் சீனாவில் ரிப்பேரான ஸ்மார்ட்போன்களை சரி செய்ய பயயனாளிகள் 24 மணி நேரத்திற்கும் குறைவாக காத்திருப்பதாகவும், பிரேசில், இந்தியா மற்றும் சீனாவில் கிட்டதட்ட 8 நாட்கள் காத்திருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  பெருமாபாலான இந்தியர்கள் ஸ்மார்ட்போன் அடிமைகளாக உள்ளனர்

சரி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுடன் அமெரிக்கர்கள் அதிகம் திருப்தி அடைவதாகவும் பிரேசில் நாட்டவர்கள் திருப்தி அடைவதே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 16 -29 வயதை சேர்ந்த 98% பேர் ஸ்மார்ட்போனுடன் தான் உறங்குவதாகவும் 13% பேர் தங்களது ஸ்மார்ட்போனை பிரிந்து இருக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியாவில் சுமார் 57% பேர் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியாது என்றும், பிரேசிலில் சுமார் 63% பேர் நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதுகின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Indians most addicted to smartphones.Nearly 57% of Indians admitted they cannot live without their smartphones.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X