வை-பை வேகத்தை இருமடங்கு அதிகரிக்க தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு இந்திய வம்சாவெளி பொறியாளர் அபாரம்.!!

Written By:

இந்திய வம்சாவெளியை சேர்ந்த பொறியாளர் ஒருவர் வை-பை வேகத்தை இரு மடங்கு அதிகரிக்கும் புதிய வழிமுறையை கண்டறிந்திருக்கின்றார். இவரது புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் தகவல் தொலைதொடர்பு முறையில் புதிய மைல் கல்லாக இருக்கும்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் மாணவரான ஹரிஷ் கிருஷ்னசுவாமி, சென்னை ஐஐடி'யில் மின்பொறியியல் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சிப்

நான்-ரெசிப்ரோக்கல் சர்குலேட்டர் மற்றும் ஃபுல்-டூப்லெக்ஸ் ரேடியோவினை நானோஸ்கேல் சிலிகான் சிப் ஒன்றில் பொருத்தி புதிய திருப்புமுனை அமைப்பினை உருவாக்கியுள்ளார்.

மாற்றம்

'இந்த புதிய தொழில்நுட்பம் தொலைதொடர்பு துறையில் புரட்சியை உண்டாக்கும்' என கொலம்பியா ஹை-ஸ்பீடு மற்றும் எம்எம்-வேவ் ஐசி லேப் தலைவர் கிருஷ்னசுவாமி தெரிவித்துள்ளார். சிலிகான் சிப்'இல் பொருத்தப்பட்ட முதல் சர்குலேட்டர் இது தான் என்றும் அவர் கூறினார்.

தகவல் பரிமாற்றம்

ஃபுல்-டூப்லெக்ஸ் கம்யூனிகேஷன் முறையில் நானோ சிலிகான் சிப் மற்றும் ஒற்றை ஆன்டெனா பயன்படுத்தி வை-பை வேகத்தை இரு மடங்கு அதிகரிக்க முடியும் என்பதை சாத்தியமாக்கியுள்ளோம் என்றும் கிருஷ்னசுவாமி மேலும் தெரிவித்துள்ளார்.

அரிய காரியம்

'ஒரே ஆய்வு அல்லது ஆய்வு குழுவின் மூலம் அடிப்படை கோட்பாட்டு பங்களிப்புகளை நடைமுறை தொடர்பைக் செயலாக்கங்களுக்கு ஏற்ப உருவாக்குவது மிகவும் அரிதான காரியம்' என இந்திய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயன்பாடு

தொடர்ந்து ஆய்வு பணிகளில் இருக்கும் இந்த தொழில்நுட்பம், மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவது குறித்து எவ்வித தகவல்களும் தற்சமயம் வரை வழங்கப்படவில்லை.

வீடியோ

புதிய தொழில்நுட்பம் குறித்த விளக்க வீடியோ.

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Indian-origin engineer develops technology to double Wi-Fi speed Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்