இந்தியாவின் புதிய "பாஸ்" இயங்குதளம் அறிமுகம்..!!

By Meganathan
|

மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கின்றது இந்திய அரசு. அதன் படி இந்தியாவிற்கென பிரத்யேக இயங்குதளத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகின்றது. இதோடு இந்தியாவில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட சில வெளிநாட்டு இயங்குதளங்களை மாற்றியமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலகை உலுக்கிய 'திருநங்கை செல்பீ'க்கள்..!

இந்தியாவின் புதிய

இதன் தொடர்ச்சியாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நவீன கணினி மேம்பாட்டு மையத்தால் "பாஸ்" (பாரத் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சொல்யூஷன்ஸ்) எனும் அதிநவீன இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளம் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டதோடு பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாக கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சாம்சங், ஃபேஸ்புக் திடீர் மோதல்.!?

அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், சீனர்கள் அடிக்கடி இந்தியாவின் முக்கிய அரசு துறை இணையதளங்களை முடக்குவது உள்ளிட்ட சில காரணங்களால் இந்தியாவிற்கென பிரத்யேக இயங்குதளத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது.

இந்தியாவின் புதிய

விண்டோஸ் மற்றும் இதர இயங்குதளங்களை போன்று இல்லாமல் மிகவும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் பாஸ் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அரசு இணையதளங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பம், தனிநபர்களின் ரகசியங்களையும் பாதுகாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Indian Govt To Launch Own Operating System. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X