இனி அரசாங்க அலுவகத்திற்கு போகவே வேண்டாம் - மோடி புதிய திட்டம்.!!

By Meganathan
|

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் தவிர்க்க முடியாத இடத்தில் இந்தியா இருக்கின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றார். அந்த வகையில் இந்திய பிரதமர் அறிவித்த ஓர் திட்டம் தான் டிஜிட்டல் இந்தியா.

அரசின் அனைத்து சேவைகளையும் மின்மயமாக்குவதோடு மக்களுக்கு எடுத்து செல்லும் நோக்கில் டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவின் ஊராட்சிகளில் அதிவேக இண்டர்நெட் வசதியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய திட்டம்

புதிய திட்டம்

அனைத்து அரசு சேவைகளையும் மொபைல் போன் மூலம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அலுவல்

அலுவல்

இந்த திட்டத்தின் மூலம் இந்தியர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் அனைத்து சேவைகளையும் மொபைல் போன் மூலமாகவே முடித்து கொள்ள முடியும்.

முன்மொழி

முன்மொழி

மத்திய அரசின் நிர்வாக சீர்த்திருத்தம் மற்றும் பொதுநல குறைபாட்டு துறை நாஸ்காம் மற்றும் கேபிஎம்ஜி இணைந்து இந்த திட்டத்தினை முன்மொழிந்தது.

முன்னேற்றம்

முன்னேற்றம்

ஐக்கிய நாடுகளில் இணைய சேவை வழங்கும் நாடுகளின் பட்டியலில் முன்னேற இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என DARPG தலைவர் தேவேந்திர சௌதாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் வென்றிடவும் இந்தியர்களுக்கு அனைத்து அரசு சேவைகளையும் மொபைல் போன் மூலம் வழங்கவும் இந்த திட்டத்தினை முழு முனைப்போடு மேம்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் மத்திய மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் ஜெஎஸ் தீபக் குறிப்பிட்டிருக்கின்றார்.

மொழி

மொழி

மேலும் இந்த மொபைல் சேவையானது பெருவாரியான மொழிகளிலும், ஆதார், மொபைல் சார்ந்த உறுதிப்படுத்தும் முறை உள்ளிட்டவைகள் இந்த திட்டத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் தீபக் தெரிவித்திருந்தார்.

வெற்றி

வெற்றி

ஒரு வேலை இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் இந்தியர்கள் அனைத்து அரசு சேவைகளையும் மொபைல் மூலம் மேற்கொள்வதோடு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க வேண்டிய நிலையும் இருக்காது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>ஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..!</strong>ஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..!

<strong>வேகமாக பரவும் 'ஸீக்கா' வைரஸ் : தடுப்பது எப்படி..??</strong>வேகமாக பரவும் 'ஸீக்கா' வைரஸ் : தடுப்பது எப்படி..??

<strong>பேட்டரி வாழ்நாளை அதிகரிக்கும் ஆண்ட்ராய்டு செயலிகள்.!!</strong>பேட்டரி வாழ்நாளை அதிகரிக்கும் ஆண்ட்ராய்டு செயலிகள்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
government plans to make all public services available on mobile phones Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X