இந்தியன் ஐயன் மேன் ரெடி : பொறியியல் மாணவர் அசத்தல்!

Written By:

ராணுவ பயன்பாடுகளுக்கு உகந்த ஐயன் மேன் உடையினை தயாரிக்கும் பணிகளில் சில நாடுகள் பல்லாயிரம் கோடிகளைச் செலவிடும் நிலையில், ஐயன் மேன் உடையினை மிகக் குறைந்த விலையில் இந்திய மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளார். இவரது வடிவமைப்பினை ராணுவம் மட்டுமின்றி கட்டுமான பணிகளிலும் பயன்படுத்த முடியும் என இந்திய மாணவரின் முகநூல் நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கருத்து

'முழுமையான ஐயன் மேன் உடை கிட்டதட்ட 330 பவுண்டு அதாவது 149.685 கிலோ எடையைச் சுமந்து கொண்டு பேட்டரி மூலம் ஓட முடியும்' என ரஷித் பின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

எக்ஸோஸ்கெலிட்டன்

இளைஞர் ஒருவர் மனிதரால் கட்டுப்படுத்தக் கூடிய எக்ஸோஸ்கெலிட்டன் ஒன்றை வடிவமைத்துள்ளார், இந்த எக்ஸோஸ்கெலிட்டன் இயந்திரங்களால் சக்தியூட்டப்பட்டு, மனித திறன்களை மேம்படுத்திப் பயன்படுத்த ஒத்துழைக்கும். என ரஷித் பின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு

இந்த எக்ஸோஸ்கெலிட்டன் பாதுகாப்பு மற்றும் அதிக எடை கையாளப்படும் துறைகளில் பயன்படுத்த முடியும் என்பதோடு இந்தக் கண்டுபிடிப்புக்காக அமெரிக்க சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கண்டுபிடிப்பாளர்

இந்தியாவைச் சேர்ந்த விமல் ஜி. நாயர் என்ற பொறியியல் மாணவர் இந்த எக்ஸோஸ்கெலிட்டனை வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கனவே இது போன்ற ரோபோட் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

ப்ரோட்டோடைப்

இவர் முதலில் வடிவமைத்த ரோபோட் நடக்கும் ப்ரோட்டோடைப் போன்று இருந்தது. ஆனால் இம்முறை உண்மையான ஐயன் மேன் உடை போன்ற ரோபோட்டினை வடிவமைத்துள்ளார்.

கடினம்

ஐயன் மேன் எக்ஸோஸ்கெலிட்டனினை கண்டுபிடித்த விமல் தனது எக்ஸோஸ்கெலிட்டன் நடப்பதில் சற்றே கடினமான ஒன்றாக இருக்கின்றது என்றும் இந்த உடை திரையில் காண்பதைப் போல் மெலிதாகவே இருக்கின்றது.

திறன்

எனினும் விமல் கண்டுபிடித்த ரோபோட் நடத்தல் மற்றும் அதிக எடையினை தூக்குவது போன்றவற்றை மேற்கொள்வது முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. மேலும் இந்த எக்ஸோஸ்கெலிட்டன் அணிந்து கொள்வதும் எளிமையானது.

பாதுகாப்பு

இன்று சந்தையில் கிடைக்கும் மற்ற எக்ஸோஸ்கெலிட்டன்களுடன் ஒப்பிடும் போது விமல் கண்டறிந்திருக்கும் ரோபோ அதனுள் இருக்கும் மனிதரைக் காப்பதோடு அதிக எடைகளைச் சிரமமின்றி சுமக்கவும் வழி செய்கின்றது.

காலம்

திரைப்படத்தில் வருவதைப் போன்ற எக்ஸோஸ்கெலிட்டன்களை உருவாக இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்றாலும் விமல் கண்டறிந்திருக்கும் எக்ஸோக்ஸெலிட்டன் விலை அடிப்படையில் அதிக முன்னிலை வகிக்கின்றது எனலாம்.

இந்தியன் ஐயன் மேன்

தற்சமயம் இந்தியன் ஐயன் மேன் என அழைக்கப்படும் இந்த எக்ஸோஸ்கெலிட்டன், வரும் காலங்களில் இன்னும் அதிகமாக மேம்படுத்தப்படுமா என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது.

விலை

இந்த எக்ஸோஸ்கெலிட்டன் வடிவமைக்க இந்திய மதிப்பில் மொத்தம் ரூ.50,182.09 வரை செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

இந்திய ஐயன் மேன் வெளியீட்டு நிகழ்வு வீடியோ.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Indian Engineering Student Built A Wearable Iron Man Suit Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்