இந்தியரின் ஐபோன் புகைப்படம் ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய விளம்பரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.!!

Written By:

பெங்களூரை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆசிஷ் பர்மர் கடந்த ஆண்டு தீபாவளியை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார், இதை தனது ஐபோன் 6எஸ் கேமரா மூலம் பதிவு செய்ததோடு இன்ஸ்டாகிராம் செயலியில் பதிவேற்றம் செய்தார்.

இந்தியரின் ஐபோன் புகைப்படம் ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய விளம்பரமாக த

தான் எடுத்ததில் நன்கு அமைந்த தனது மனைவியின் புகைப்படத்தை மட்டும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் #ShotOniPhone6S என்ற ஹேஷ் டேக் மூலம் பதிவேற்றம் செய்தார். இந்த புகைப்படம் இன்று உலக பிரபலம் அடைந்திருக்கின்றது.

இந்தியரின் ஐபோன் புகைப்படம் ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய விளம்பரமாக த

விளையாட்டாக தான் எடுத்த புகைப்படம் ஆப்பிள் நிறுவனத்தின் ஷாட் ஆன் ஐபோன் 6 எஸ் பிரச்சாரத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. இதே பிரச்சாரத்திற்காக உலகம் முழுக்க சுமார் 53 புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே புகைப்படம் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியரின் ஐபோன் புகைப்படம் ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய விளம்பரமாக த

ஐபோன் விளம்பரத்தில் பயன்படுத்த தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த புகைப்படம் உலகம் முழுக்க பயன்படுத்த இருக்கின்றது. இதை தொடர்ந்து இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி விளம்பர நிறுவனங்கள் தனது மனைவியை விளம்பரங்களில் நடிக்க வைக்க தொடர்பு கொண்டதாகவும், விருப்பமின்மை காரணமாக அவைகளை தனது மனைவி நிராகரித்து விட்டதாக ஆசிஷ் பர்மர் தெரிவித்துள்ளார்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Indian clicks photo on iPhone 6S, its now a global Apple ad Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்