சீனாவை வீழ்த்துமா இந்தியா..!?

Posted by:

இந்தியா மற்றும் சீனா தான் பிற உலக நாடுகளை ஒப்பிடும் போது அதிக வளர்ச்சி என்ற போட்டியில் மிகவும் பலமாக போட்டி போட்டுக் கொள்ளும் நாடுகள் ஆகும். அதாவது சராசரியான உலக நாடுகளின் வளர்ச்சி விகிதத்தோடு ஒப்பிடுகையில் இந்த இரு நாடுகளும் 3 மடங்கு அதிகமாக வளர்ச்சி அடைகிறதாம்..!

'தெளிவாக' செயல்படும் அமெரிக்கர்கள், நோட் திஸ் பாயிண்ட்..!

முக்கியமாக நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்றவைகளில் இந்தியா மற்றும் சீனா போடும் போட்டி மிகவும் அதிகம். அப்படியாக இந்தியா மற்றும் சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி சார்ந்த வளர்ச்சிகளை ஒப்பிட்டு பார்த்து, யார் இந்த வளர்ச்சி பந்தயத்தில் முதலில் வருவார்கள் என்பதை கணிக்க முடியும்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வளர்ச்சி :

ஒருபக்கம், ஒரே மாதிரியான வளர்ச்சி இருந்தாலும் இரண்டு நாடுகளுக்கும் பல வேற்றுமைகளும் உண்டு என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்..!

இடையே :

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான ஒற்றுமையாக, மாபெரும் மக்கள் தொகை உள்ளது..!

மக்கள் தொகை :

அதவாது, உலகின் மொத்த மக்கள் தொகையில், 38% மக்கள் தொகையை இந்தியா மற்றும் சீனா கொண்டுள்ளது..!

வளர்ச்சி பாதை :

இப்பெரும் மக்கள் தொகை சக்தி தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளின் வளர்ச்சி பாதைக்கு அடித்தளமாகும்..!

சீனா :

1982-களில் இந்தியாவை விட சீனா பல முன்னேற்றங்களை கண்டிருந்தது..!

இளம் மக்கள் :

அந்த காலகட்டத்தில் சீனாவில் அதிக இளம் மக்கள் இருந்தனர், ஆகையால் சீனா கல்வி, ஆரோக்கியம், பெண்கள் பங்களிப்பு போன்றவைகளில் நல்ல வளர்ச்சி கண்டிருந்தது..!

இந்தியா :

அதே 1982 ஆண்டு காலகட்டத்தில், இந்தியாவிலும் அதிக மக்கள் தொகை இருந்தனர். இருப்பினும் பெரும்பாலும் படிப்பபறிவு இன்றியும், போதிய ஊட்டச்சத்து இன்றியும்தான் இருந்தனர்.

பெண்களின் பங்களிப்பு :

அந்த காலகட்டத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றி பேசவே வேண்டாம், வீட்டிற்க்குள் அடைப்பட்டு கிடந்தனர் பெண்கள்..!

முக்கிய கூறு :

ஆனால் இப்போது நிலைமை வேறு, வளர்ச்சிக்கான முக்கிய கூறுகள் இரு நாடுகளிடமும் உண்டு..! இது தான் நிஜமான போட்டியும் கூட..!

முதலீடு :

இந்தியா மற்றும் சீனா, இரண்டுமே வெளிநாடுகளில் உள்ள தங்களின் முதலீடுகளை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றது..!

உதவி :

சீனாவில் சிறு நிறுவனங்கள் தொழில் நடத்த, சீன அரசாங்கம் அதிக உதவி செய்வதில் எந்த குறையும் வைப்பதில்லையாம்.!

சீனாவின் வளர்ச்சி :

இதன் மூலம் உலகின் பிற நாடுகளில் சீனாவின் வளர்ச்சியை மேம்படுத்த செய்யும் செலவை விட, சொந்த நாட்டில் பிற நாடுகளுக்கு உதவி புரிந்து எளிமையான வழிறையில் வளர்ச்சியை நோக்கி செல்கிறதாம் சீனா..!

தொழில் :

மறுபக்கம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்றால், அதன் மூலம் இந்திய மக்களுக்கும் நன்மைகள் விளைய வேண்டும் என்பதில் இந்தியா குறியாக இருக்கிறதாம்.!

இந்தியா :

எடுத்துக்காட்டாக வேலை வாய்ப்பு மற்றும் உள்நாட்டில் பயன்படுவது போன்ற பொருள்களை தயாரித்தல் போன்றவைகளில் குறியாக இருக்கிறதாம் இந்தியா..!

உலக சந்தை :

இதன் மூலம்தான், சீனா போன்ற நாடுகளை இந்தியா, உலக சந்தையில் நேருக்கு நேர் நின்று சந்திக்க முடியும் என்பதும் உண்மையே ஆகும்..!

முன்னிலை :

அப்படியாக தான் உலகிலேயே மிகவும் அதிகமான இனம் சார்ந்த மருந்துகள் மற்றும் சாப்ட்வேர்கள் வழங்குவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது..!

முன்னேற்றம் :

அது மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம், தொடர்‌பியல், வாழ்க்கைமுறை போன்றவைகளிலும் இந்திய முன்னேற்றம் கண்டுள்ளது..!

இரண்டுமே :

விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா ஆகிய இரண்டுமே நல்ல முன்னேற்றத்தை கண்டுகொண்டே தான் இருக்கின்றது..!

போட்டி :

இருப்பினும் இரண்டு நாடுகளுக்கு இடையேவும், ஏது ஆசியாவின் 'ஸ்பேஸ் பவர் ஹவுஸ்' ஆக உருவாகப்போகிறது, என்ற போட்டி இருக்க தான் செய்கிறது..!

ஆரோக்கியமானதே :

யார் அதிக அணு ஆயுதம் தயாரிக்கிறார்கள், யார் பெரிய ராணுவ பலம் கொண்டவர்கள் என்று போட்டி போடுவதை விட, யார் அதிக வளர்ச்சி அடைகிறார்கள் என்ற போட்டி ஆரோக்கியமானதே ஆகும்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Comparison between the two global giants in terms of technology and Space.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்