இந்தியாவில் தடை செய்யப்பட்ட கூகுள் அம்சம்.!!

Written By:

இந்திய நகரங்களை இயற்கைநிலகாட்சி (லேண்ட்ஸ்கேப்) முறையில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் காண காத்திரக்க வேண்டும். கூகுள் நிறுவனத்தின் 360 கோணத்தில் தெரு வாரியாக மேப்பிங் செய்யும் திட்டத்தை இந்திய நகரங்களில் மேற்கொள்ள மத்திய அரசு தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

01

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல், நகரத்தின் புகைப்பட கண்காணிப்புகளை பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டதால் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த சேவையை அனுமதிக்க தயங்குகின்றனர்.

02

கூகுளின் புதிய சேவை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதால் இதற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கின்றது.

03

2013 ஆம் ஆண்டு இந்திய சுற்றுலா துறை அமைச்சகம் கூகுளின் ஸ்ட்ரீட் வியூ போன்ற செயலியை உருவாக்க WoNoBo என்ற இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

04

WoNoBo செயலி மற்றும் இந்நிறுவனத்தின் இணையதளம் இந்தியாவின் முக்கிய நகரங்களை 360 கோணத்தில் காண்பிக்கின்றது.

05

இது மத்திய அரசின் இறுதி முடிவு இல்லை என்றும், அரசின் மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின் தனியார் நிறுவனங்கள் இந்திய நகரங்களின் மேப்பிங் போன்ற சேவைகளை வழங்க மத்திய அரசு அனுமதி பெறுவது உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்படலாம் என மத்திய அமைச்சர் கிரென் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.

06

பாதுகாப்பு காரணங்களுக்காக கூகுள் ஸ்ட்ரீட் வியூ சேவைக்கு இந்தியாவில் தடை விதிப்பது முதல் முறை அல்ல. 2011 ஆம் ஆண்டு பெங்களூரூ நகரங்களை மேப்பிங் செய்ய பெங்களூரூ நகர காவல்துறை தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

07

2013 ஆம் ஆண்டு கூகுள் ஸ்ட்ரீட் வியூ சேவையானது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மற்றும் மத்திய கலாச்சார துறையுடன் இணைந்து இந்தியாவில் அமைந்திருக்கும் 100க்கும் மேற்ப்பட்ட நினைவுச் சின்னங்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டது.

08

இதன் பின் இந்தியாவின் முக்கிய வரலாற்று சின்னங்கள் கூகுள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

09

சர்ச்சைக்குரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளின் அதிக தரம் கொண்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததற்காக கூகுள் நிறுவனத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது.

10

எனினும் கூகுளின் ஸ்ட்ரீட் வியூ சேவையானது வங்கதேசம், பூட்டான், மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
India temporarily blocked Google Street View Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்