'கிண்டலடித்த' நாடுகளுக்கு, இதோ இந்தியாவின் 'பதிலடி'..!!

|

"ராக்கெட் பாகங்களை சைக்கிள்லயும், மாட்டு வண்டியிலயும் வச்சி தள்ளிட்டு போன நாடு தானே இந்தியா..!?" என்று நம் நாட்டின் வளர்ச்சி காலத்தை கேலி செய்த, கிண்டலடித்த நாடுகளுக்கு, இதோ 'நம் பொன்னான காலம்' கொடுக்கும் பதிலடி..!

'கிண்டலடித்த' நாடுகளுக்கு, இதோ இந்தியாவின் 'பதிலடி'..!!

சூப்பர் பவர் நாடுகள் தொடங்கி குட்டி நாடுகள் வரை, இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கண்டு நாளுக்கு நாள் வியந்து கொண்டே இருக்கிறது என்பது தான் நிதர்சனம், முக்கியமாக விண்வெளி துறை வளர்ச்சியை கண்டு வாய் பிளக்கிறது என்றே கூறலாம். அதற்கு மேலுமொரு எடுத்துகாட்டு தான் இது..!

அந்நிய நாட்டு செயற்கைகோள் :

அந்நிய நாட்டு செயற்கைகோள் :

2016 - 2017 என்ற காலக்கட்டத்திற்குள் மொத்தம் 25 அந்நியநாட்டு செயற்கைகோள்களை, இந்தியா விண்ணில் செலுத்த உதவ இருக்கிறது.

மொத்தம் :

மொத்தம் :

அந்த 25 செயற்கை கோள்களில் 12 செயற்கை கோள்கள் அமெரிக்காவிற்கு சொந்தமானது என்பதும், மீதமுள்ள 13 செயற்கை கோள்களும் ஜெர்மனி, கனடா, அல்ஜீரியா, ஜப்பான் , இந்தோனேஷியா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளை சேர்ந்தவைகளாகும்.

பி.எஸ்.எல்.வி :

பி.எஸ்.எல்.வி :

இந்த 25 செயற்கைகோள்களும் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி-யின் மூலம் விண்ணில் செலுத்தப் பட இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்பகத்தன்மை :

நம்பகத்தன்மை :

போலார் சாட்டிலைட் லாஞ்ச வெயிக்கல் என்பதின் சுருக்கமான பி.எஸ்.எல்.வி-கள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவைகள் என்பதும், செப்டம்பர் 2009 ஆம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் :

சந்திராயன் :

பிஎஸ்எல்வி-யின் மற்றொரு வடிவமான பி.எஸ்.எல்.வி- சி11 தான் சந்திராயனை விண்ணில் செலுத்தப் பயன்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா உட்பட :

அமெரிக்கா உட்பட :

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி யின் அபாரமான நம்பகத்தன்மை தங்களிடம் இல்லாத காரணத்தால் தான், அமெரிக்கா உட்பட பெரும்பாலான உலக நாடுகள் தங்களின் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இந்தியாவின் உதவியை நாடுகிறது.

57 செயற்கை கோள் :

57 செயற்கை கோள் :

அப்படியாக இந்த தேதி வரையிலாக 21 நாடுகளை சேர்ந்த மொத்தம் 57 செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த உதவியுள்ளது இந்தியாவின் இஸ்ரோ..!

வணிக ஏற்பாடு :

வணிக ஏற்பாடு :

அதுமட்டுமின்றி விண்ணில் செலுத்தப்பட்ட பிற நாட்டு செயற்கைகோள்கள் எல்லாமே பி.எஸ்.எல்.வி மூலம் தான் விண்ணுக்குள் செலுத்தப் படுகின்றன என்பதும், இவை அனைத்தும் ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இடையே உள்ள வணிக ஏற்பாட்டின் கீழ் நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

25 செயற்கைகோள்கள் :

25 செயற்கைகோள்கள் :

இந்தோனேஷியா - 1 செயற்கைகோள்,
மலேஷியா - 1 செயற்கைகோள்,
ஜப்பான் - 1 செயற்கைகோள்,
அல்ஜீரியா - 3 செயற்கைகோள்கள்,
கனடா - 3 செயற்கைகோள்கள்,
ஜெர்மனி - 4 செயற்கைக்கோள்கள்,
அமெரிக்கா - 12 செயற்கைகோள்கள் என
மொத்தம் 25 செயற்கைக்கோள்களை கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின்கீழ், 2016 - 2017 என்ற காலக்கட்டத்திற்குள், இந்தியா விண்ணில் செலுத்த உதவ இருக்கிறது.

 9 நாடுகள் :

9 நாடுகள் :

கடந்த 3 ஆண்டுகளில் அதாவது ஜனவரி 2013 முதல் டிசம்பர் 2015 வரையிலாக, ஒன்பது நாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றி :

வெற்றி :

அதாவது சிங்கப்பூரின் ஏழு செயற்கைக்கோள்கள், ஐக்கிய ராஜ்யம் - 6, கனடா - 5, அமெரிக்கா - 4, ஆஸ்திரியா - 2 மற்றும் டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தோனேஷியாவின் தலா 1 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது இந்தியாவின் இஸ்ரோ..!

80.6 மில்லியன் யூரோக்கள் :

80.6 மில்லியன் யூரோக்கள் :

மொத்தம் 28 நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 80.6 மில்லியன் யூரோக்கள் ஈட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நானோ மற்றும் மைக்ரோ :

நானோ மற்றும் மைக்ரோ :

சமீபத்தில் 9 அமெரிக்க செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது என்பதும் அவைகள் நானோ மற்றும் மைக்ரோ செயற்கைகோள்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

முதல் முறை :

முதல் முறை :

இந்தியா, அமெரிக்க செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது அதுவே முதல் முறையாகும். மேலும் அமெரிக்க செயற்கைகோள்கள் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி-களில் (PSLV) பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டன.

அடுத்த மைல்கல் :

அடுத்த மைல்கல் :

அது மட்டுமின்றி இஸ்ரோ, தன் முதல் ரீயூசபில் லான்ச் வெயிக்கல் டெக்னாலஜி (Reusable Launch Vehicle-Technology) பரிசோதனையை இந்த ஆண்டு இறுதியில் நடத்த இருக்கிறது..!

முயற்சி:

முயற்சி:

இஸ்ரோவின் ரீயூசபில் லான்ச் வெயிக்கல் டெக்னாலஜி முயற்சியானது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மற்றுமொரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.

கேலி சித்திரம் :

கேலி சித்திரம் :

இந்தியாவின் மங்கள்யான் விண்கலம், செய்வாய் கிரகத்தை அடைந்ததை கிண்டல் செய்யும் விதத்தில் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கை, கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது..!

பதிலடி :

பதிலடி :

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெயரிடப்படாத ஒரு அமெரிக்க விண்கலம், விண்ணில் ஏவப்பட்ட போது வெடித்து சிதறிய போது, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை, ஒரு கேலி சித்திரத்தை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது..!

காலத்தின் பதில் :

காலத்தின் பதில் :

இன்று, அதே அமெரிக்காவை இந்தியாவிடம் தொழில்நுட்ப உதவியை நாட வைத்து, 'காலம்' தன் பங்கிற்கு ஒரு பதிலடியை கொடுத்திருக்கிறது..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

நாசாவை நம்பினால் 'நாசமாய்' போக வேண்டியது தான் போல..!!


பூமிக்குள் புதையுண்டு வாழும் திகிலூட்டும் 'உச்சவிரும்பி' இனம்..!


இந்த 7 அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு 'அந்த நோய்' நிச்சயம்..!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
India to put 12 US satellites into space in 2016 to 2017. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X