சீக்கிரமே 100 கோடி மொபைல் போன் பயனாளர்கள் இந்தியாவில் இருப்பர்!

ஜிஎஸ்எம்ஏ ஆய்வு அறிக்கையின் படி இந்தியாவில் 100 கோடி பேர் மொபைல் போன் கருவிகளைப் பயன்படுத்துவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By:

உலகளவில் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது. மலிவு விலை முதல் விலை உயர்ந்த கருவிகள் வரை இந்திய மொபைல் போன் சந்தையில் கிடைக்காத கருவிகளே இல்லை என்றாலும் இந்திய சந்தையானது பட்ஜெட் கருவிகளுக்கானது என அறியப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பயனர்

2020 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் கிட்டதட்ட 100 கோடி மொபைல் போன் பயனர்கள் இருப்பர், தற்சமயம் உலகில் அதிகம் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்

2016 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இத்தகவல்கள் ஜிஎஸ்எம்ஏ (GSMA) எனும் ஆய்வறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வளர்ச்சி

ஜிஎஸ்எம்ஏ அறிக்கையின் படி ஜூன் 2016 இறுதி வரை இந்தியாவில் சுமார் 616 மில்லியன் அதாவது 61.6 கோடி மொபைல் போன் பயனர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றம்

மொபைல் பிராட்பேண்ட் சேவைகளுக்கு இந்தியாவில் மிகப் பெரிய தொழில்நுட்ப மாற்றம் இருப்பதாகவும், 3ஜி / 4ஜி மொபைல் பிராட்பேண்ட் கனெக்ஷன்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 670 மில்லியன் அதாவது 67 கோடியாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

டிஜிட்டல் இந்தியா

இந்த அறிக்கையானது இந்தியாவின் மொபைல் வர்த்தகத்தை அதிகரிக்கும், இது மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவியாக இருக்கும் என ஜிஎஸ்எம்ஏ தலைவர் தெரிவித்தார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
India to Have 1 Billion Mobile Users by 2020
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்