இந்தியா - ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் அடுத்த குறி..!?

|

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சொல்வது போல் ஐஎஸ்ஐஎஸ் இயக்கமானது முழுக்க முழுக்க பணம் பெற்று கொண்டு கொலை செய்யும் ஒரு கூலிப்படையாக இருந்தாலும் சரி, இல்லை அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகள் சொல்வது போல் ஐஎஸ்ஐஎஸ் ஆனது ஒரு அதிபயங்கர தீவிரவாத இயக்கமாக இருந்தாலும் சரி.

இறுதியில் ரத்தம் சிந்துவதும், உயிர் இழப்பதும் அப்பாவி மக்கள் தானே தவிர உலக அரசியல் விளையாட்டில் ஈடுபடும் தலைவர்கள் அல்ல. அதற்கு சமீபத்தில் பிரான்ஸில் நடந்த தாக்குதல் சம்பவமே சாட்சியாகும்.

தொழில்நுட்பம் :

தொழில்நுட்பம் :

கோழைத்தனமான பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தில் வெறும் துப்பாக்கிகளும், கத்திகளும் மட்டும் பயன்படுத்தப்படவில்லை - பயன் படுத்தப்பட்டது தொழில்நுட்பமும் தான்..!

ஹேக் :

ஹேக் :

பிரான்ஸ் நாட்டின் நையாண்டி வார இதழ் சார்லீ ஹெப்டோ தாக்கப்பட்ட சில நாட்கள் கழித்து சுமார் 19,000 பிரான்ஸ் வலைதளங்களை ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் ஹேக் செய்துள்ளனர்.

இந்தியா :

இந்தியா :

ஹேக் செய்யப்பட்ட பிரான்ஸ் வலைதளங்களில் சில இந்தியாவிலும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி :

டெல்லி :

அதாவது இந்திய தலைநகரமான டெல்லியில் உள்ள பிரான்ஸ் பள்ளி வலை தளம் உட்பட இந்தியாவில் உள்ள சில பிரான்ஸ் வலைதளங்களை ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் ஹேக் செய்துள்ளனர்.

நிரூபனம் :

நிரூபனம் :

இது பிரான்ஸ் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாக தோன்றினாலும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினரால் இந்தியாவிற்க்குள்ளும் நுழைய முடியும் என்பதை நிரூபித்து உள்ளத்தை உணர முடிகிறது.

நிலை :

நிலை :

ஆனால், இந்தியாவின் உண்மையான நிலை என்னவென்றால் சைபர் போருக்கு முற்றிலும் தாயார் ஆகாத நிலையில் தான் இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார், தினேஷ் ஓ பெர்ஜா.

சைபர் செக்யூரிட்டி வல்லுநர் :

சைபர் செக்யூரிட்டி வல்லுநர் :

தினேஷ் ஓ பெர்ஜா - ஓபன் செக்யூரிட்டி அலையன்ஸ்-ல் (Open Security Alliance) சைபர் செக்யூரிட்டி வல்லுநர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒற்றுமையின்மை :

ஒற்றுமையின்மை :

மேலும் இந்தியாவில் பல நிறுவனங்கள் சைபர் பாதுகாப்பிற்காக வேலை செய்தாலும் ஒற்றுமையின்மை காரணமாக சைபர் வெளி பாதுகாப்பில், இந்தியா வளர்ச்சி அடையாமல் இருக்கிறது என்றும் தினேஷ் ஓ பெர்ஜா கருத்து தெரிவித்துள்ளார்.

சாட்சி :

சாட்சி :

கடந்த சில ஆண்டு இந்தியா மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களே அதற்கு சாட்சியாகும். அவைகள் இந்திய அரசு ஆவணங்களில் பதிவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஷிங் :

பிஷிங் :

அந்த ஆவண பதிவின் கீழ்படி இந்தியாவில் இதுவரை மொத்தம் 22,060 பிஷிங் (phishing) வகை சைபர் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளனர்.

திருடுதல் :

திருடுதல் :

பிஷிங் என்றால் - யூசர் பெயர், பாஸ்வேர்டுகள், கிரெடிட் கார்ட் விவரங்கள் ஆகியவைகளை திருடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கேனிங் :

ஸ்கேனிங் :

மேலும் 71,780 ஸ்கேனிங் (scanning) வகை சைபர் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதாவது, கள்ளத்தனமான ஸ்கேன் மூலம் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள்.

ஸ்பாம் :

ஸ்பாம் :

மேலும் இந்தியாவில் இதுவரை 1,30,338 ஸ்பாம் (Spam) வகை சைபர் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

மெசேஜ்கள் :

மெசேஜ்கள் :

ஸ்பாம் என்பது வைரஸ் பரப்பும் பொருத்தமற்ற மற்றும் கோரப்படாத மெசேஜ்கள் ஆகும்.

வைரஸ் பரப்பும் குறியீடு :

வைரஸ் பரப்பும் குறியீடு :

அது மட்டுமின்றி இதுவரை மொத்தம் 49,504 தீங்கிழைக்கும் வைரஸ் பரப்பும் குறியீடு மற்றும் இணைய ஊடுருவல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தகவல்கள் :

தகவல்கள் :

மேற்க்கூறப்பட்டுள்ள புள்ளி விவர தகவல்கள் அனைத்தும் 2012, 2013, 2014 மற்றும் 2015 (மே வரையிலாக) இந்திய கணினி அவசர நடவடிக்கை அணியினரால் (Indian Computer Emergency Response Team - CERT-In) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் :

மொத்தம் :

அந்த தகவலின் கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டில் மட்டுமே மொத்தம் 27,605 இந்திய வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

 குறைவு :

குறைவு :

2013-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது இது குறைவாகும். 2013-ஆம் ஆண்டில் 28,481 இந்திய வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

எண்ணிக்கை :

எண்ணிக்கை :

2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் இந்த ஹேக் சம்பவ எண்ணிக்கையானது கூடிக்கொண்டே போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2014 :

2014 :

அப்படியாக கடந்த ஆண்டு சுமார் 32,323 இந்திய வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

2015 :

2015 :

மேலும் இந்த ஆண்டு மே மாதம் வரையிலாக மொத்தம் 9,057 வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

குறைவு :

குறைவு :

எந்தவொரு வழக்கமான அரசாங்க புள்ளி விவரத்தை போன்றே இதுவும் நிகழ்த்தப்பட்டதை விட மிகவும் குறைந்த அளவிலான ஹேக் சம்பவங்களை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் சைபர் குற்ற பிரிவு வல்லுநர்கள்.

போட்டி :

போட்டி :

குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க நாட்களில் போட்டி போட்டு ஹேக் சமப்வங்கள் நிகழ்த்தப்பாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் சக்தி :

ஆன்லைன் சக்தி :

அதாவது அந்த நாட்களில் ஹேக்கர்கள் தங்களின் ஆன்லைன் சக்தியை எதிரி நாடுகளுக்கு காட்ட விரும்புவார்கள் என்கிறார்கள் சைபர் குற்றப்பிரிவு வல்லுநர்கள்.

பதிலடி :

பதிலடி :

அப்படியாக சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் கேரள அரசு வலைதளத்தை ஹேக் செய்யவும் அதற்கு பதிலடியாக இந்திய ஹேக்கர்கள் பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைதளம் உட்பட பல பாகிஸ்தானிய வலைதளங்களை ஹேக் செய்தது குறிப்பிடத்தக்கது.

சைபர் யுத்தம் :

சைபர் யுத்தம் :

இருப்பினும் கூட இந்தியாவிற்கு வலுவான சைபர் அச்சுறுத்தல் அல்லது சட்டப்பூர்வமான கட்டமைப்பை அறிக்கை என்று இதுவரை எதுவும் இல்லை என்ற போதிலும் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது சைபர் யுத்தம் தொடுக்கப்படலாம் என்பது தான் நிதர்சனம்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
India fears ISIS web attacks as experts warn of re-run of Hebdo cyber hacks. Read more in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X