ஜப்பானை ஓரங்கட்டும் இந்தியா..!

By Meganathan
|

உலகளவில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாம் இடத்தை பிக்கும் என சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையால் உலக நாடுகள் வியப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா..!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், உலகின் பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் சொந்தமாக தயாரிப்பு ஆலைகளை நிறுவ திட்டமிட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

சீனாவை வீழ்த்துமா இந்தியா..!?

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆய்வு அறிக்கையானது அடுத்த ஆண்டு வாக்கில் இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலக அளவில் மூன்றாம் இடத்தையும், 2017 ஆம் ஆண்டு வாக்கில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது.

ஸ்ட்ராடஜி

ஸ்ட்ராடஜி

ஸ்ட்ராடஜி அனாலடிக்ஸ் சர்வே ரிப்போர்ட் 4ஜி எல்டிஈ சந்தை குறித்து உலகளவிலான ஆய்வு ஒன்றை நடத்தியது.

ஆய்வு

ஆய்வு

இந்த ஆய்வு அறிக்கையின் படி 2016 ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய 4ஜி எல்டிஈ சந்தையாக உருவெடுக்கும் என தெரிவித்துள்ளது.

2017

2017

மேலும் 2017 ஆம் ஆண்டில் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீடியாடெக்

மீடியாடெக்

இந்தியா தற்சமயம் 4ஜி எல்டிஈ ஸ்மார்ட்போன்களின் துவக்க கட்டத்தில் இருக்கின்றது என மீடியாடெக் நிறுவனத்தின் பொது மேலாளர் ஃபின்பர் மோநிஹான் தெரிவித்திருக்கின்றார்.

போட்டி

போட்டி

மேலும் 4ஜி எல்டிஈ சந்தையில் இந்தியா தற்சமயம் துவக்க கட்டத்தில் இருந்தாலும் சிறப்பான போட்டியை கொடுக்கின்றது என்றும் ஃபின்பர் தெரிவித்திருந்தார்.

முக்கியம்

முக்கியம்

மொபைல் சந்தையை எடுத்து கொண்டால் உலகளவில் இந்தியா எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்றும் ஃபின்பர் தெரிவித்திருந்தார்.

அறிக்கை

அறிக்கை

2015 ஆம் ஆண்டில் 250 மில்லியன் பயனாளிகளை கொண்டிருக்கும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையானது அடுத்த ஆண்டில் சுமார் 326 மில்லியனாக இருக்கும் என்றும் மேலும் 109 மில்லியன் வரை உயர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கேபிஎம்ஜி எனும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையானது 2ஜியில் இருந்து 3ஜி மற்றும் 4ஜி நோக்கி வேகமாக பயணிக்கின்றது. மேலும் பீச்சர் போன்கள் அனைத்தும் ஸ்மார்ட்போன்களாகி வருகின்றது.

முடிவு

முடிவு

இந்த நிலையானது இந்தியாவில் 3ஜி சேவை மற்றும் பீச்சர் போன்களுக்கான முடிவின் ஆரம்பம் என்றும் அடுத்த ஆண்டின் இறுதியில் 3ஜி இல்லாமல் போகவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
India to become the world’s 3rd largest 4G LTE market. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X