இந்தியாவில் இன்டெர்நெட் பயன்படுத்துவேர் எண்னிக்கை விரைவில் அமெரிக்காவை விட அதிகமாகும்

By Meganathan
|

இந்தியாவில் இன்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்னிக்கை டிசெம்பர் 2014 ஆம் போக்கில் சுமார் 300 மில்லியனாக உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அமெரிக்காவை காட்டிலும் இந்தியாவில் இந்டெர்நெட் பயனாளிகளின் எண்னிக்கை அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகின்றது. இதில் 185 மில்லியன் பேர் மொபைல் மூலம் இன்டெர்நெட் பயன்படுத்துகின்றனர், இது இணையதள செய்தி நிறுவனங்களின் தேவையை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்டெர்நெட் பயன்படுத்துவேர் எண்னிக்கைஅதிகரிப்பு...

தற்சமயம் 600 மில்லியன் இணைய பயனாளிகளை கொண்டு சீனா முதலிடம் வகிக்கிறது, அமெரிக்கா 279 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ளது. இந்திய சர்வதேச இன்டெர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷனின் அறிக்கை படி அக்டோபர் 2013 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் இன்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்னிக்கை கிராமபுறங்களில் மட்டும் 29 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு டிசெம்பர் வாக்கில் 213 மில்லியனாக இருந்த எண்னிக்கை டிசெம்பர் மாதத்தில் 302 மில்லியனாக அதிதரிக்கும் என்றும் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியாவில் இந்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்னிக்கை 354 மில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இணைய பயனாளிகளின் எண்னிக்கை 10 மில்லியனில் இருந்து 100 மில்லியனாக அதிகரிக்க 10 ஆண்டுகள் ஆனது, ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 100 மில்லியனில் இருந்து 200 மில்லியனாக அதிகரித்திருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
India to become second-largest Internet market by December 2014. here you will find a detailed report of the Internet Users in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X