உலகை மாற்றப்போகும் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகள்.!!

Written By:

2015 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில தினங்களே இருக்கின்றது. தொழில்நுட்ப சந்தையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள், கருவிகள் வெளியாகின. ஆனால் அவை அனைத்தும் வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.

உலகில் எதுவும் நிலையல்ல என்ற நிலையில் உலகையே மாற்றும் திறன் கொண்ட சில கண்டுபிடிப்புகளை இந்த ஆண்டில் காண முடிந்தது. இதை நிரூபிக்கும் விதமாக சில வியக்க வைக்கும், நம்ப முடியாத திறன் கொண்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை பார்ப்போமா..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

காலணி

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட காலணி தான் இது. நைக் நிறுவனம் தயாரித்த இந்த காலணி பக்கவாதம் இருப்பவர்கள் எளிதில் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊசி

ரெவ் மெட்எக்ஸ் எனும் நிறுவனம் தயாரித்த இந்த வகை ஊசியில் இருக்கும் பஞ்சு போன்ற பொருள் காயங்களை நொடிகளில் கட்டுப்படுத்தி ரத்தம் கசிவதை நிறுத்தும் திறன் கொண்டிருக்கின்றது.

மைக்ரோசிப்

சிறிய சிப் கொண்டு இண்டர்நெட் இல்லாமல் பல தகவல்களை வழங்க வழி செய்யும் கருவி தான் ஈகிரானரி பாக்கெட் லைப்ரரி. கல்வி சார்ந்த தகவல்களை இண்டர்நெட் இல்லாமல் வழங்கும் இந்த கருவியில் தகவல்களை வழங்க பல்வேறு நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

குடிநீர்

3டி முறையில் ப்ரின்ட் செய்யப்பட்ட ரோட்டார் கடல் நீரை குடிநீராக மாற்றும் திறன் கொண்டிருக்கின்றது. இந்த கருவியை ஜிஇ நிறுவனம் தயாரித்திருக்கின்றது.

விளக்கு

செடி மூலம் சக்தியூட்டப்படும் மின்விளக்கு தான் ப்ளான்ட்லம்பராஸ். இது குறித்த வீடியோவை பாருங்கள்.

அக்வாஃப்ரெஸ்கோ

எம்ஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு தான் அக்வாஃப்ரெஸ்கோ. வாஷிங் மெஷின் கருவியில் வீணடிக்கப்படும் தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்ட அக்வாஃப்ரெஸ்கோ ஒவ்வொரு முறையும் துணி துவைக்க பயன்படுத்தப்படும் நீரில் 95 சதவீதம் நீரை மீண்டும் பயன்படுத்த வழி செய்கின்றது.

ப்ரோஸ்தெடிக்

ப்ரோஸ்தெடிக் எனப்படும் செயற்கை கை பயனர்களுக்கு தொடும் உணர்வை அளிக்கின்றது. நியூரோ தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

செயற்கை சுவாசம்

அக்யூட் ரெஸ்பிரேட்டரி இல்னஸ் எனும் நோய் மூலம் ஐந்து வயது குறைவான குழந்தைகள் அதிகளவில் மரணிப்பதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கின்றது. இந்த நிலையை மாற்றும் நோக்கில் அமைந்துள்ளது மாணவர்களின் நியோவென்ட் கருவி. குறைந்த செலவில் குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் வழங்கும்படி இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

செங்கல்

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் எம்ஐடி மாணவர்களின் கண்டறிந்திருக்கும் புதிய முறை தான் ஈகோ ப்ளாக் ப்ரிக். இது குறித்த விளக்க வீடியோவை பாருங்கள்.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Read here in Tamil about the incredible innovations that improved the world in 2015.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்