கடந்த மகளிர் தினத்தன்று ஆண்கள் செய்த 'வேலை'யை பாருங்களேன்.!

மென் வில் பி 'ஆல்வேஸ்' பி மென்.!

|

பொதுவாக ஆண்கள், அவரவர் மனைவிமார்களின் பிறந்தநாளை, குழந்தைகளின் பிறந்தநாளை, அவ்வளவு ஏன் அவர்களின் திருமண நாளை கூட மறந்துவிடும் பழக்கம் கொண்டவர்கள் ஆவர். ஏன்.? எதனால்.? - என்று விளக்கம் கேட்டால் ஒருவேளை ஆண்கள் குறிப்பிட்ட தினத்தின் தேதிகளை மறக்கலாம் ஆனால் குடும்பத்தை ஒரு நாளும் மறந்ததில்லை. அவர்களின் சுயநலமில்லாத ஒட்டுமொத்த உழைப்பும் அவர்களின் குடும்பத்திற்காகத்தான், என்று விளக்கம் கூறலாம்.

இதுஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் இந்த மார்ச் மாதம் இந்திய ஆண்கள் செய்த ஒரு காரியத்திற்கு எந்த விளக்கமும் என்னிடமில்லை. உங்களிடமாவது இருக்கிறதா.??

மென் வில் பி மென்

மென் வில் பி மென்

ஆங்கிலத்தில் "மென் வில் பி மென்" என்பார்கள். அதை நம்மாளுங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா - "இந்த ஆம்பளங்கள திருத்தவே முடியாது" என்று கூறலாம். உடனே பொசுக்கென்று கோபம் கொண்டு எரிமலை போல வெடிக்க வேண்டாம். சமாச்சாரம் என்னனு முதல்ல தெரிஞ்சுக்கோங்க அப்புறமா உங்களுக்கே புரியும்.!

ஆயிரம் பெரியார் வந்தாலும்

ஆயிரம் பெரியார் வந்தாலும்

கடந்த மார்ச் 08 ஆம் தேதி அதாவது உலக மகளிர் தினத்தன்று இந்திய ஆண்கள் கூஆயிரம் பெரியார் வந்தாலும்குள் தேடலில் எதை அதிகமா தேடியுள்ளார் என்பதை அறிந்தால் - "ஒரு பெரியார் இல்ல.. இன்னும் ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களையெலலாம் முடியாது டா" என்றவொரு திரைப்பட நகைச்சுவை வசனம் தான் நினைவிற்குள் குதிக்கும்.!

அதிக அளவில் தேடல்

அதிக அளவில் தேடல்

மார்ச் 8-ஆம் தேதி தொடங்குவதற்கு 7 நாட்களுக்கு முன்பிருந்தே இந்திய ஆண்கள் அவரவர் அலுவகங்களில், வீடுகளில் உட்கார்ந்து கொண்டு ஆண்கள் தினம் எப்போது என்று அதிக அளவில் தேடல் நிகழ்த்தியுள்ளனர். இந்த தேடலில் எந்த மாநிலத்து ஆண்கள் முதல் இடம் பிடித் துள்ளனர்.? எந்த மாநிலத்து ஆண்கள் சிறிதளவு கூட தேடலே நிகழ்த்தவில்லை என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது.

முயற்சி

முயற்சி

சர்வதேச ஆண்கள் தினம் பற்றிய ஒரு பெருவாரியான தேடல் ஆனது, குறிப்பாக சர்வதேச மகளிர் தினதன்று தான் ஆண்களுக்கு நினைவிற்கு வருகிறது என்பதையும், ஒவ்வொரு ஆணும் தனக்கான ஆண்கள் தினம் எப்போது வரும் என்று கண்டுபிடிக்க முயற்சித்துள்ளதும் இதிலிருந்து வெளிப்படையாக தெரிய வருகிறது.

கர்நாடகா மற்றும் தெலுங்கானா

கர்நாடகா மற்றும் தெலுங்கானா

சுவாரஸ்யமாக அரியானாவிலுள்ள ஆண்கள் தான் ஆண்கள் தினம் என்று.?- என்ற கூகுள் தேடலை மிக அதிகமாக நிகழ்த்தியுள்ளன. அவர்களை தொடர்ந்து பஞ்சாப், தில்லி, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த ஆண்கள் அடுத்தடுத்த இடங்களை பிடிக்கின்றனர்.

நான்காவது இடத்தில்

நான்காவது இடத்தில்

உத்தரப் பிரதேசம் ஆனது இந்த தேடல் பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. மகளிர் தினத்தன்று கூட கூகுள் இந்தியாவில் மிகவும் அதிகமாக தேடியது எது என்ற தலைப்புகள் சார்ந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ஆண்கள் தினம் என்று என்ற தலைப்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைதி அமைதி.!

அமைதி அமைதி.!

அதெல்லாம் சரி.. சர்வதேச ஆண்கள் தினம் என்று என கூறவேயில்லையே என்று மீண்டும் கூகுள் தேடல் நிகழ்த்தி ஏற்கனவே கப்பலேறிய நமது வீம்பை மீண்டும் நாடு கடத்த வேண்டாம், நானே கூறிவிடுகிறேன் - நவம்பர் 19 அன்று தான் சர்வதேச ஆண்கள் தினம், இன்னும் நிறையா நாள் இருக்கு.! அமைதி அமைதி.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

"குறிப்பாக" ஆண்ட்ராய்டில் ஆபாசப்படம் பார்க்க கூடாது, ஏன்.?

Best Mobiles in India

Read more about:
English summary
This Women's Day they search on Google for Men's Day. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X