ஏலியன்கள் இருப்பது உறுதி..!

எல்லாவற்றையும் கண்டு பிடித்த, கண்டு பிடிக்க வல்ல மனித இனத்திற்கு மிச்சம் இருப்பது ஒரே ஒரு சவால் மட்டும்தான். அதுவும் சாத்தியமில்லை என்று சொல்ல கூடிய பெரிய சவால் - வேற்று கிரகவாசிகள்..!

வேற்று கிரகவாசிகள் - அப்படி ஒன்று இல்லவே இல்லை என்றோ அல்லது இருக்கிறது என்றோ, வெறும் வார்த்தைகளால் மட்டும் சொன்னால் போதுமா..? இருக்கிறதோ, இல்லையோ - அதற்கு என்ன சாட்சி..?! இதுதான் அனைவரின் கேள்வியும், தேடலும் என்றால்... இதோ அந்த பதிலை தேடி செல்கிறது தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் மற்றும் மனித இனமும்..!

கோட்பாட்டு இயற்பியலாளர் :

கோட்பாட்டு இயற்பியலாளர் :

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், அண்டவியல் சார்ந்த கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார்..!

ஆசை :

ஆசை :

அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic lateral sclerosis) என்னும் நரம்பு நோயால் பாதிக்கப் பட்ட இவர், விண்வெளிக்கு என்றாவது ஒரு நாள் செல்ல வேண்டும் என்ற ஆசைக் கொண்டவர்

நம்பிக்கை :

நம்பிக்கை :

உலகில் யாரை விடவும் வேற்று கிரகவாசிகளின் இருப்பை அதிகம் நம்புபவர் இவர்..!

ஏலியன் இன்வேஷன் கோட்பாடு :

ஏலியன் இன்வேஷன் கோட்பாடு :

வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்பதை பற்றிய இவரின் கோட்பாடுகளே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்..!

அடுத்த கட்டம் :

அடுத்த கட்டம் :

வேற்று கிரகவாசிகாளின் இருப்பு பற்றிய அதிகப்படியான ஆர்வத்தால் இவர் தன் ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளார்..!

தீர்க்கமான ஆராய்ச்சி :

தீர்க்கமான ஆராய்ச்சி :

100 மில்லியன் டாலர் செலவில் (640 கோடி ரூபாய்) ஏலியன்கள் பற்றிய தீர்க்கமான மற்றும் இதுவரை முயலாத ஒரு ஆராய்ச்சியை செய்ய இருக்கிறார் - ஸ்டீபன் ஹாக்கிங்..!

தேடுதல் வேட்டை :

தேடுதல் வேட்டை :

உலகிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கிகளை பயன்படுத்தி, அண்டம் முழுக்க ஒரு பெரிய வேற்று கிரகவாச தேடலை நடத்த இருக்கிறார்..!

பல அண்டங்கள் வரை :

பல அண்டங்கள் வரை :

இந்த ஸ்கேன் தேடல் லட்சக்கணக்கான அருகாமை நட்சத்திரங்கள் தொடங்கி, பால்வழி மண்டலத்தின் நடுப்பகுதி மற்றும் பல அண்டங்கள் வரை நீள இருக்கிறது..!

வேகம்; முக்கியம்; அதிகம் :

வேகம்; முக்கியம்; அதிகம் :

இந்த வேற்றுகிரக வாச தேடலானது இதுவரை செய்த ஆராய்ச்சிகளை விட, 50 மடங்கு அதிக முக்கியமானது, 100 மடங்கு வேகமானது, 10 மடங்கு அதிகமாக அண்டத்தை ஸ்கேன் செய்யக் கூடியதாம்..!

சிக்னல்கள் :

சிக்னல்கள் :

இதுவரை இல்லாத அளவிலான ரேடியோ ஸ்பெக்ட்ரம் அல்லது லேசர் சிக்னல்கள் போன்றவைகளை இந்த தேடலில் எதிர்பார்க்கலாம்..!

நிதி உதவி :

நிதி உதவி :

பெரிய செலவில் நடக்கும் இந்த ஆராய்ச்சிக்கு ரஷ்ய தொழில் அதிபாரான யூரி மில்னர், நிதி உதவி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..!

"நம்மை கண்கானிக்கிறார்கள்" :

"எண்ணில் அடங்காத இந்த அண்டங்களில் நிச்சயமாக வேற்று கிரகவாசிகள் உண்டு. அவர்கள் நம்மை கண்கானித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்."

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

"இரண்டில் ஒன்றை கண்டிப்பாக நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்" என்று கூறும் ஸ்டீபன் ஹாக்கிங், அதில் குறியாகவும் இருக்கிறார். மிக விரைவில் அதிர்ச்சிகள் வெளியாகலாம்..!

 
Read more about:
English summary
Stephen Hawking Launches Biggest-Ever Search for Alien Life.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X