ஐடியா 1 ஜிபி 3ஜி டேட்டா வெறும் ரூ.89/- தான், ஆனா..

ஐடியா செல்லுலார் தனது பயனர்களுக்குப் புதிய சலுகை விலை டேட்டா பேக் ஒன்றை அறிவித்துள்ளது. இதனைப் பெற நீங்க என்ன செய்யனும் எனப் பாருங்க..

Written By:

ரிலையன்ஸ் ஜியோ தனது 4ஜி சேவைகளை அறிமுகம் செய்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது. ஜியோவின் வெல்கம் ஆஃபர் மூலம் இன்றும் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளப் பல்வேறு சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.

ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் சுமார் 1 ஜிபி டேட்டாவினை குறைந்த கட்டணத்திற்குப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் திட்டம் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. இது குறித்த விரிவான தகவல்களை இங்குப் பாருங்கள்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பிரீபெயிட் பயனர்கள்

ரூ.89/- செலுத்தி ஐடியாவின் 1ஜிபி 3ஜி டேட்டா தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஐடியா இந்தச் சலுகையை ஏற்கனவே தேர்வு செய்த பிரீபெயிட் பயனர்களுக்கு மட்டும் வழங்கியுள்ளது.

இச்சலுகை உங்களுக்குக் கிடைக்குமா

ஐடியா செல்லுலார் தான் தேர்வு செய்த வாடிக்கையாளர்களுக்குப் புதிய சலுகை குறித்த அறிவிப்பை குறுந்தகவல் மூலம் அனுப்பி வருகிறது. இதனால் உங்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளக் குறுந்தகவல்களைப் பாருங்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முன்பணம் தேவையில்லை

ஏற்கனவே முன்பணம் செலுத்தினால் தான் சேவை என்பது போல் இல்லாமல், ஐடியாவின் புதிய சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் எவ்வித முன்பணமும் செலுத்த தேவையில்லை.

வேலிடிட்டி

ரீசார்ஜ் செய்ததும் 1ஜிபி டேட்டா சுமார் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படும். இதனால் ரீசார்ஜ் செய்தது முதல் 1ஜிபி டேட்டாவினை தங்கு தடையின்றிப் பயன்படுத்த முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Idea Offers 1GB 3G Data at Just Rs. 89
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்