ஐடியாவின் 'டேட்டா ஜாக்பாட்' சலுகையின்கீழ் மலிவு விலையில் 10ஜிபி.!

10ஜிபி அளவிலான தரவை ஒவ்வொரு மாதமும்.!

Written By:

யார் அதிகமான டேட்டா சலுகைகளை வழங்குகிறார்களோ அந்த தொலைதொடர்பு ஆப்ரேட்டர் தான் நுகர்வோர்களை மத்தியில் முதலிடத்தை பெற முடியுமென்ற நிலையை அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

அதனால் ஏர்டெல், ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே பெரிய தள்ளுமுள்ளு போட்டியே நடக்கிறது. அந்த போட்டியின் ஒரு பகுதியாக ஐடியா செல்லுலார் நிறுவனம் அதன் 'டேட்டா ஜாக்பாட்' சலுகையை அறிமுகம் செய்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ரூ.100/-க்கு

ஐடியா அறிவித்துள்ள இந்த டேட்டா ஜாக்பாட் சலுகையின்கீழ் ஐடியா நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட வாடிக்கையாளர்கள் 10ஜிபி அளவிலான தரவை ஒவ்வொரு மாதமும் ரூ.100/-க்கு பெற முடியும்.

மாதத்திற்கு

மைஐடியா ஆப் மெல்லாம் கிடைக்கும் இந்த டேட்டா ஜாக்பாட் வாய்ப்பானது முதல் மூன்று மாதங்களுக்கு இந்த விலையில் மாதத்திற்கு 10ஜிபி தரவு வழங்கும். பின்னர் முதல் மூன்று மாதங்களில் முடிந்த பிறகு பயனர்கள் அதே விலையில் 1ஜிபிஅளவிலான தரவை பெறுவார்கள்.

போஸ்ட்பெய்டு பயனர்கள்

இதற்கு முன்னர் இந்தியாவின் அனைத்து தகவல்தொடர்பு நிறுவனங்களுமே ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு ஆக்கிரமிப்பு சலுகைகள் வெளியிட்ட காரணத்தினால் போஸ்ட்பெய்டு பயனர்கள் தனித்து விடப்பட்ட ஒரு நிலைக்கு தள்ளப்பட்டன. அதை மனதில் கொண்டு தான் ஐடியா இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

1ஜிபி அளவிலான 4ஜி

இந்தச் சலுகையின் கீழ், ரூ.499/- திட்டத்தில் இணைந்த ஐடியா போஸ்ட்பெய்டு பயனர்கள், அடுத்த 3 மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவை பெறுவர். குறிப்பிட்ட மூன்று மாதங்கள் முடிந்ததுமே மார்ச் 31, 2018 வரையிலாக நாள் ஒன்றிக்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவை தொடர்ந்து பெற பயனர்கள் ரூ.300/மாதம் செலுத்த வேண்டும்.

சிறப்பு சலுகை

ஒருவேளைக்கு நீங்கள் ரூ.499/- திட்டத்தில்சேரவில்லை என்றால், கவலை வேண்டாம். ஐடியா அதன் ரூ.349/- அல்லது ரூ.498/- திட்ட பயனர்களுக்கும் ஒரு சிறப்பு சலுகையை வழங்குகிறது. திட்டம்அந்த திட்டங்களின் கீழ் சந்தாதாரர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு வெறும் ரூ.50/-க்கு (ஒரு மாதத்திற்கு) 1ஜிபி அளவிலானதரவை வழங்குகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Idea Offers 10GB Data at Rs 100 for Postpaid Customers. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்