சபாஷ் சரியான போட்டி : ஐடியாவும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்கியது.!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் ஏர்செல் ஆகிய போட்டியாளர்களை எதிர்கொள்ளும் நோக்கி ஐடியாவும் அதன் வரம்பற்ற அழைப்புகள் சலுகையை அறிவித்துள்ளது.

Written By:

நேற்று ஏர்டெல் நிறுவனம் அதன் இரண்டு வரம்பற்ற குரல் அழைப்பு ரீசார்ஜ் திட்டங்களை முன்னெடுத்து தொலைத்தொடர்பு சந்தையை கலக்க ஆரம்பித்த உடனேயே இன்று டாடா டோகோமோ ரூ.495/- பேக்கின் கீழ் 10ஜிபி அளவிலான ஹை-ஸ்பீட் (அதிவேக) தரவை அறிமுகம் செய்தது.

இப்போது ரிலையன்ஸ் ஜியோவை சமாளிப்பது மட்டுமின்றி ஏர்டெல் நிறுவன அதிரடிகளையும் தாக்குப்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஐடியா நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிக அதிரடியான ஒரு சலுகையை தற்போது அறிவித்துள்ளது. அதாவது ஏர்டெல் போன்றே ஐடியாவும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது.

இந்த புதிய ஐடியா பேக்கிங் விலை என்ன மற்றும் இந்த பேக்கின் நன்மைகள் என்ன என்பதை பற்றிய தொகுப்பே இது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

விலை

சமீபத்திய அறிமுகமான ஐடியா பேக்கின் விலை ரூ.348/- ஆகும். இந்த பேக் ஆனது வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதிலுமான எந்த நெட்வர்க் உடனாகவும் உள்ளூர் மற்றும் வெளியூர் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.

1ஜிபி

புதிய ஐடியா ரூ.348/- பேக்கின் கீழ் வரம்பற்ற அழைப்புகள் மட்டுமின்றி ஐடியா பயனர்களுக்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவும் கிடைக்கும் (ஏர்டெல் சமீபத்தில் வழங்கிய குரல் அழைப்பு சலுகைகளில் உடன் டேட்டாவும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மற்றொரு புதிய பேக்

மறுபுறம், ஐடியாவில் மற்றொரு புதிய ரூ.148/- பேக் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேக் ஐடியா-டூ-ஐடியாவிற்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மட்டும் வழங்குகிறது.

வாட்ஸ்ஆப் பயன்பாடு மட்டும்

இந்த பேக்கின் கீழும் 300எம்பி அளவிலான 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. குறைந்த அளவிலான டேட்டா உட்கொள்ளும் வலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் பயன்பாடு மட்டும் கொண்ட பயனர்களுக்கு இந்த தரவு போதுமானதாக இருக்கும்.

செல்லுபடி

இந்த இரண்டு புதிய ஐடியா பேக்குகளுமே 28 நாட்கள் செல்லுபடியாகும். மற்றும் 4ஜி ஸ்மார்ட்போன் கொண்டிராத பயனர்களுக்கு வெறும் 50 எம்பி அளவிலான தரவு மட்டுமே வழங்கப்படும் (இரண்டு திட்டங்களிலும்), மற்றும் இந்த வரம்பற்ற அழைப்பு திட்டங்களின் விலை வட்டத்திற்கு ஏற்றபடி வேறுபடும் என்றும் ஐடியா செல்லுலார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

இண்டர்நெட், ஸ்மார்ட்போன் இன்றி பேடிம் அணுகல் : டோல்-ப்ரீ எண் அறிமுகம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Idea Launches Unlimited Voice Calling Packs to Counter Reliance Jio, Airtel. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்