ஐடியா : ஒரு வருட இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து, 12 மாதங்களுக்கு (ரூ 9,000 மதிப்புள்ள) இலவச தரவு பெறும் சிறப்பு சலுகை ஒன்றை ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.

Written By:

சமீபத்தில் ஏர்டெல் அதன் புதிய சிறப்பு சலுகை ஒன்றின்கீழ் 4ஜி சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கான (ரூ 9,000 மதிப்புள்ள) 4ஜி டேட்டாவை இலவசமாக வழங்கியது. ஏர்டெல் வழங்கும் இந்த 12 மாதங்களுக்கான இலவச 4ஜி டேட்டா திட்டத்தை எந்தவொரு 4ஜி மொபைல் பயனாளியும், ஏற்கனவே ஏர்டெல் சேவையை (ப்ரீபெய்ட், போஸ்ட்பெயிட்) பெறும் மற்றும் ஏர்டெல் நெட்வொர்க்கில் தற்போது இல்லாத வாடிக்கையாளரும் கூட பெறலாம் என்பது குறிப்பித்தக்கது.

இப்போது ஐடியா நிறுவனமும் அதே போன்றதொரு சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சலுகையை ஐடியா சேவைக்கு மாறும் புதிய வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஏற்கனவே ஐடியா சேவையின் கீழ் இருக்கும் வாடிக்கையாளர்கள் ஐடியா 4ஜி சேவைக்கு மாறினாலும் பெறலாம். அதெப்படி..? மற்றும் இந்த திட்டத்தின் மேலும் பல நன்மைகள் என்னென்ன என்பதை பற்றிய தொகுப்பே இது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சமமான விலை

ஐடியா சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களை வாங்குவதன் மூலம் 12 மாதங்களுக்கான ரூ.9,000/- மதிப்பிலான இலவச தரவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நினைவுகூர வேண்டுமென்றால், ஏர்டெல் நிறுவனமும் இதேபோன்றதொரு ஒரு சமமான விலை கட்டத்தில் தான் அதன் ஒரு வருட இலவச 4ஜி டேட்டா சிறப்பு சலுகையை வழங்கியது மற்றும் அதன் விலை வட்டத்திற்கு ஏற்றாற்போல மாறுபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள்

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற, ஐடியா நிறுவனம் வழங்கும் 3ஜிபி அளவிலான 4ஜி/3ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்கும் ரூ.346/- ரீசார்ஜ் பேக்கை பெற வேண்டும்.

செல்லுபடி

ஒரு புதிய 4ஜி கைபேசியில் இந்த பேக் ரீசார்ஜ் செய்யப்பட்டால் கூடுதலாக 1ஜிபி அளவிலான தரவு கிடைக்கும். மற்றும் இந்த அனைத்து நன்மைகளும் 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 31 டிசம்பர் 2017 வரை அதிகபட்சமாக இந்த ரீசார்ஜை 13 முறை நிகழ்த்தலாம்.

3ஜிபி

போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு ஐடியா இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அப்படியாக 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா (4ஜி மொபைல் கொண்டிருந்தால்), வரம்பற்ற உள்ளூர், தேசிய மற்றும் உள்வரும் ரோமிங் அழைப்புகள் ஆகியவைகளை ரூ.499/-க்கு வழங்குகிறது. ஒருவேளை 4ஜி கைபேசி இல்லாத பயனர்களாக இருப்பின் அதிக அளவிலான அழைப்பு நன்மைகள் பெறுவர், ஆனால் இலவச தரவாக 1ஜிபி மட்டுமே பெறுவர்.

மற்றொரு பேக்

ஐடியா அதன் மற்றொரு ரூ.999/- பேக்கின் கீழ் வரம்பற்ற உள்ளூர், தேசிய அழைப்புகள் ரோமிங் மற்றும் 4ஜி கைபேசிகளுக்கான 8ஜிபி இலவச தரவும் 4ஜி கைபேசிகள் அல்லாத பயனர்களுக்கு 5ஜிபி தரவும் வழங்குகிறது. கூடுதலாக, ஐடியா அதன் ம்யூஸிக் மற்றும் மூவிஸ்-களின் ஒரு இலவச சந்தாவையும் இந்த திட்டங்களின் கீழ் வழங்குகிறது.

மேம்படுத்தல் நிகழ்த்தினால்

4ஜி கைபேசிகளுக்கு மேம்படுத்தல் நிகழ்த்தும் அனைத்து ஏற்கனவே இருக்கும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ஐடியா புதிய திட்டங்களின் கீழ் கூடுதலாக 3ஜிபி தரவை டிசம்பர் 31, 2017 வரை வழங்கும். அதாவது புதிய 4ஜி கைபேசியில் வாடிக்கையாளர் ரூ.499/- மற்றும் ரூ.999/- திட்டங்களின் கீழ் முறையே 6ஜிபி மற்றும் 11ஜிபி என்ற அளவிலான இலவச தரவை ஒவ்வொரு மாதமும் பெறுவர்.

கூடுதல் 3ஜிபி பெற

ஐடியா வழங்கும் கூடுதல் 3ஜிபி தரவு வாய்ப்பை பெற, புதிய 4ஜி கைபேசியில் இருந்து வாடிக்கையாளர்கள் ஐடியா மொபைல் இண்டர்நெட் பயன்படுத்தி மைஐடியா ஆப் அல்லது நிறுவனத்தின் வலைத்தளத்தில் 4ஜி ஹேண்ட்செட் பகுதிக்கு சென்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் படிக்க

ப்ளிப்கார்ட் அதிரடி : ஐபோன் 7, 6எஸ், 5எஸ் கருவிகளுக்கு சிறப்பு தள்ளுபடி.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Idea announces additional data, unlimited voice calling for new and existing customers. Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்