ஐசிசி டி20 உலக கோப்பை : நேரலையில் தகவல்களை வழங்கும் செயலி மற்றும் சேவைகள்.!!

Posted by:

உலகமே ஆவலோடு எதிர்நோக்கி காத்திருந்த உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று துவங்கிவிட்டது. கிரிக்கெட் ப்ரியர்கள் அதிகம் இருக்கும் இந்தியாவில் இம்முறை அனைத்து போட்டிகளும் நடைபெற இருக்கின்றது. கோப்பை வெல்வதில் உறுதியாக இருக்கும் இந்திய அணி கேப்டன் தோனி தலைமையில் களம் இறங்க காத்திருக்கின்றது.

16 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் மொத்தம் 36 போட்டிகள் நடைபெற இருக்கின்றது. இதன் இறுதி போட்டி ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. கிரிக்கெட் ப்ரியர்கள் அனைத்து போட்டிகளையும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற நினைப்பர்.

ஆனால் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுவோர் கிரிக்கெட் போட்டிகளை பார்க்காவிட்டாலும் அவை சார்ந்த தகவல்களை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பர். இங்கு உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி சார்ந்த தகவல்களை உடனுக்குடன் வழங்கும் செயலி மற்றும் சேவைகள் எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஐசிசி டி20 உலக கோப்பை ஆப்

இந்த ஆண்டு உலக கோப்பை போட்டிக்கென ஐசிசி பிரத்யேக செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்திட முடியும். இந்த செயலியில் உலக கோப்பை நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

செங்கா டிவி

உலக கோப்பை போட்டிகளை நேரலையில் பார்க்க செங்கா டிவி ஆப் உதவு செய்யும். இந்த செயலி 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் வை-பை என அனைத்து நெட்வர்க்களிலும் வேலை செய்வதோடு இணையதளத்திலும் கிடைக்கின்றது.

ட்விட்டர்

ட்விட்டர் சமூக வலைதளத்தில் அனைத்து உலக செய்திகள் மற்றும் நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ள முடியும். இப்படி இருக்க குறிப்பிட்ட சில ஹேஷ்டேக் பயன்படுத்தி போட்டி சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

யூட்யூப்

ஸ்மார்ட்போனில் யூட்யூப் செயலி பயன்படுத்துவோர் உலக கோப்பை போட்டிகளை நேரலையில் பார்த்து ரசிக்க முடியும்.

கூகுள் டூடுள்

கூகுள் தேடுபொறி பயன்படுத்தியும் உலக கோப்பை நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும்.

யாஹூ கிரிக்கெட்

கூகுள் போன்றே யாஹூ கிரிக்கெட் சேவையிலும் உலக கோப்பை நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடியும்.

ஸ்கோர் போர்டு

இணையதளம் மூலம் உலக கோப்பை நிகழ்வுகளை தெரிந்து கொள்ள ww.scoreboard.com தளத்தை பயன்படுத்தலாம். இந்த தளத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சார்ந்து அனைத்து வித தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
ICC T20 World Cup Apps and Services to get Latest Updates Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்