மனிதன் உருவாக்கிய 'மனித இனம்'.!!

By Aruna Saravanan
|

பொதுவாக ரோபோட்களை அனைவருக்கும் பிடிக்கும். அவை நடந்து வருவதும், செயல் புரிவதையும் காணும் போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கண்டு நாம் வியக்காமல் இருக்கவே முடியாது. இவைகளால் சிரிக்க, மகிழ்சிப்படுத்த என்று எல்லாமும் செய்ய முடியும். மனித இனத்தின் இன்னுமொரு வளர்ச்சியாக கருதப்படும் ஹியூமனாய்டு வகை (Humanoid) ரோப்போட்களை பற்றி இங்கு காண்போம்.

pepper

pepper

இது மனித வடிவில் இருப்பதோடு மிகவும் ரசிக்கக்கூடிய தன்மைகளை கொண்டுள்ளது. மனித தன்மையை பிரதிபலிப்பதில் இதுவே முதல் ரோபோட் ஆகும். இதனால் மனிதர்களின் அடிப்படை உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல் பட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Atlas Unplugged

Atlas Unplugged

இது போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இதனால் வெளி உலகத்தில் உலாவ முடியும். மற்றும் இதன் கால்களை கொண்டு தூக்கவோ எடுத்து செல்லவோ முடியும் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

Asimo

Asimo

இதை ஹோண்டா தயாரித்துள்ளது. இதை உலகத்துடன் ஒன்றி செயல் படும் விதத்தில் வடிவமைத்துள்ளனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு 6 கிலோமீட்டர் தூரம் வரை நடக்க முடியும்.

iCUB

iCUB

இதை ஐஐடி தயாரித்துள்ளது. இதை 20க்கும் மேற்பட்ட ஆய்வு நிலையங்களில் பயன்படுத்துகின்றனர். இதில் 53 மோட்டார்கள் உள்ளன. இந்த ரோபோட் அதன் கை, கால், தலை, இடுப்பு என அனைத்தையும் அசைக்க முடியும். இதனால் பார்க்க, கேட்க்க, உணரவும் கூட முடியும்.

Poppy

Poppy

இந்த ரோபோவை உலகத்தோடு இணைந்து செயல் புரியும் திறனுடன் தயாரித்துள்ளனர். இதை வல்லுநர்கள் சிறப்பான முறையில் செயல்படுத்துகின்றனர். மேலும் இதை கல்விக்காகவும், கலை மற்றும் அறிவியலுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.

Ken

Ken

இதை ENCS தாயாரித்துள்ளது. மனித தன்மை ரோபாவால் மொழிகளையும், குரல்களையும் கையாளத் தெறிய வேண்டும். ஆனால் இந்த ரோபாவால் அதை இன்னும் துள்ளியமாக செய்ய முடியவில்லை என்பதால் இன்னும் பயனுக்கு வரவில்லை. இதை இன்னும் வளர வேண்டும் என்பதற்காக ஆய்வில் வைத்துள்ளனர்.

Romeo

Romeo

இது 140 செமீ உயரம் கொண்டது. இது ஃபிரென்ச் மற்றும் ஐரோப்பாவால் இணைந்து உருவாக்கப்பட்டது. இதனால் கதவுகளை திறக்க முடியும், படி ஏற முடியும், மேசை மீதுள்ள பொருட்களை அடைய முடியும். இது வயதானவர்களுக்காக செய்யப்பட்டுள்ளது.

NAO

NAO

இது 58 செ.மீ. உயரம். 2006ஆம் ஆண்டில் அடெர்பன் எனும் குழுவால் தோற்றுவிக்கப்பட்டது. இது ஒருவருடைய தனிப்பட்ட நண்பனாக செயல்படும். இதை நமது விருப்படி ஆட்டிவைக்க முடியும்.

Humanoid Robot HRP-4

Humanoid Robot HRP-4

இதனால் மனிதர்களுடன் வாழ முடியும். இதற்கு "slim athlete" வடிவம் கொடுத்துள்ளனர். Promet என்ற பெயரிலும் இது அறியப்படும்.

ROBOTIC POLE DANCERS – LEXY AND TESS

ROBOTIC POLE DANCERS – LEXY AND TESS

இதை ஜெர்மானிய தயாரிப்பாளர்கள் வடிவமைத்துள்ளனர். இது நடனம் ஆடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை ஒரு போல்டான்ஸிங் ரோபோவாகும். தற்பொழுது இவை விற்பனைக்கு வரவில்லை.

Best Mobiles in India

Read more about:
English summary
Humanoid Robots that can Display Human Emotions!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X