ஹூவாய் பி10-உலகின் முதல் 4.5 ஜி டெக்னாலஜி ஸ்மார்ட்போன்.!

மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் ஹூவாய் பி10 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது.இது 4.5 ஜி டெக்னாலஜியுடன் வெளியாகக்கூடிய முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

By Ilamparidi
|

நடந்து முடிந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் தங்களது புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்புகளை வெளியிட்டன.அதுமட்டுமன்றி தங்களது அடுத்த தயாரிப்புகளையும் இந்நிகழ்ச்சியின் வழியாக அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்நிகழ்ச்சியானது குறிப்பிட்டு காட்டுகின்ற மற்றுமோர் விடயம்,ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினுக்கு ஏற்பவும் இன்றைய சூழலுக்கு ஏற்பவும் தங்களது தயாரிப்புகளில் பல்வேறு புதிய அம்சங்களை ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் சேர்த்துள்ளன.

அத்தகைய,புதியதொரு அம்சத்துடன் வெளிவருகிறது ஹூவாய் பி10.இதுகுறித்த தகவல்கள் கீழே.

ஹூவாய் பி10:

ஹூவாய் பி10:

நேற்று பார்சிலோனாவில் நடந்து முடிந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஹூவாய் பி10 ஆனது வெளிப்படுவதற்கு முன்னமே அது குறித்து ஸ்மார்ட்போன் சந்தையில் பலதரப்பட்ட தகவல்கள் பரவிக்கிடந்தன.அதன் முந்தைய மாடல்களை விடவும் புதுப்பிக்கப்பட்ட பல அம்சங்களைக் கொண்டும்,மேம்பட்ட பல அம்சங்களுடனும் வெளிவரக்கூடும் என ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களால் பெரிது எதிர்பார்க்கப்பட்டது.

அம்சங்கள்:

அம்சங்கள்:

ஹூவாய் பி10 ஸ்மார்ட்போன் ஆனது கிரின் 960 ப்ரோசஸர்,4ஜிபி ரேம்,64 ஜிபி ஸ்டோரேஜ்,3200 எம் ஏ எச் பேட்டரி,ஆண்ட்ராய்டு 7.0 வுடன் இஎம்யுஐ 5.1,யுஎஸ்பி-சி,டூயல் சிம்,4x4 எல்டிஇ மிமோ,கைரேகை ஸ்கேனர்,5.2 இன்ச் 1080பி டிஸ்பிளே உள்ளிட வசதிகளைக்கொண்டு வெளிவருகிறது ஹூவாய் பி10.

4.5 ஜி டெக்னாலஜி:

4.5 ஜி டெக்னாலஜி:

மனித வாழ்வின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இப்போது கணினி மற்றும் இணையம் ஆகியவற்றினை மையப்படுத்தயே அமைந்துவிட்டது.அதன் காரணமாகத்தான் இன்றைய சூழலில் இணைய பயன்பாடானது அதிகரித்தவண்ணமே உள்ளது.இணைய வழி பணப்பரிவர்த்தனை,வர்த்தகம்,கல்வி உள்ளிட்டவையாவும் இணையத்தினை மையப்படுத்தி அமைந்துவிட்டதால் ஸ்மார்ட்போன் நிறுவங்களும் தங்களது தயாரிப்புகளில் இணையத்தினை விரைவாகவும்,மகிழ்ச்சியாகவும் பயன்படுத்த பல அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றன.அந்த வகையில் ஹூவாய் பி10 4.5ஜி டெக்னாலஜியுடன் வெளிவருகிறது.

வேகமாக:

வேகமாக:

ஹூவாய் பி10 ஆனது 4.5ஜி எல்டிஇ டெக்னாலஜியுடன் வெளிவந்துள்ளதுதால் இதன் வழியாக இப்போது உள்ளதனை விட இருமுறை வேகமாக டவுன்லோட் செய்ய இயலும்.மேலும்,4x4 மிமோ டெக்னாலஜியுடன் வெளிவருவதால் 60 சதவிகிதம் வரையிலும் அழைப்புக்களை எவ்வித நெட்ஒர்க் பிரச்சனையுமின்றி மேற்கொள்ளலாம்.

விலை மற்றும் நிறம்:

விலை மற்றும் நிறம்:

பென்டோன் உள்ளிட்ட நிறங்களில் வெளிவருகிறது ஹூவாய் பி10.இதன் விலையானது 649 யூரோ ஆகும்.இந்திய மதிப்பில் ரூபாய் 45,862 ஆகும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

வெளியானது மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ்-அம்சங்கள் மற்றும் விலை.!

Best Mobiles in India

Read more about:
English summary
Huawei unveils worlds 1st smartphone with 4.5G technology.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X