மலிவு விலையில் டூவல் ரியர் கேமிரா, நீண்ட பேட்டரி கொண்ட ஹானர் 6எக்ஸ்.!

நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிஇஎஸ் 2017-ல் ஹானர் 6எக்ஸ் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை (தோராயமாக) மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தொகுப்பே இது.

Written By:

ஹூவாய் நிறுவனம் அதன் ஹானர் 6எக்ஸ் ஸ்மார்ட்போனை நெவாடா, லாஸ் வேகாஸ்-ல் ஒவ்வொரு ஜனவரி மாதமும் நடைபெறும் சிஎஸ்எஸ் 2017 என்ற ஒரு உலக நுகர்வோர் மின்னணு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்ப வர்த்தக காட்சியில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்தாண்டு ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகும் இக்கருவியின் விலை மாறட்டும் கிடைக்கக் கூடியத்தன்மை ஆகிய விவரங்கள் தெளிவாக இல்லை எனினும் இந்த ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபர் மாதம் சீனாவில் மூன்று வகைகளில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அது சார்ந்த தோராய விலை நிர்ணயம் மற்றும் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விவரங்கள் இதோ.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மூன்று வகை

ஹானர் 6எக்ஸ் கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக அதன் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இக்கருவி சீனாவில் மூன்று வகைகளில் (3ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு, 4ஜிபி ரேம் / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் / 64ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு) தொடங்கப்பட்டது.

விலை நிர்ணயம்

இந்த மூன்று வகைகளும் முறையே இந்திய மதிப்பின்படி சுமார் ரூ 9,900/-, சுமார் ரூ.12,900/- மற்றும் சுமார் ரூ.15,800/- என்ற விலைக்கு விற்கப்பட்டன. ஆனால் இந்த விலை நிர்ணயம் இந்தியாவிலும் நிகழும் என்பது நிச்சயமற்றது தான்.

வண்ண வேறுபாடு

தங்கம், வெள்ளி, சாம்பல், நீலம் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய வண்ண வேறுபாடுகளில் கிடைக்கும் ஹானர் 6எக்ஸ் கருவிகளின் எந்தெந்த வண்ண வேறுபாடுகள் இந்தியாவில் கிடைக்கும் என்பதில் தெளிவில்லை.

டிஸ்ப்ளே, மேம்பாடுகள்

இக்கருவி 5.5 இன்ச் (1080x1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் ஹானர் 5எக்ஸ் பல மேம்பாடுகள் கொண்டுள்ளது; ஒரு கிரின் 655 அக்டாகோர் எஸ்ஓசி, இரண்டாவது சிம் ஸ்லாட்டில் மைக்ரோ எஸ்டி அட்டைகளுக்கான (128ஜிபி) ஆதரவு கொண்ட ஹைப்ரிட் டூவல் சிம் (நானோ சிம்) ஸ்லாட்.

கேமரா அமைப்பு

இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படையில் இயங்கும் இஎம்யூஐ (EMUI) 4.1 இயங்குதளம், பிடிஏஎப் மற்றும் ஒரு கூடுதல் 2-மெகாபிக்சல் சென்சார் ஆதரவு கொண்ட ஒரு 12-மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு, மற்றும் செல்பீகளுக்கான ஒரு 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.

பிற அம்சங்கள் :

- 0.3 வினாடிகளில் ஸ்மார்ட்போனை திறக்கும் கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்
- ப்ளூடூத் 4.1
- வைஃபை 802.11 பி/ஜி/என்
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- 3340எம்ஏஎச் பேட்டரி திறன்
- 150.9x72.6x8.2எம்எம் அளவு
- 62 கிராம் எடை

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Huawei Honor 6X: Affordable option with dual rear cameras, long battery. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்