60 நொடிகளில் ஒரு லட்சம் முன்பதிவுகளை கடந்தது ஹூவாய் ஹானர் 4எக்ஸ்

Posted by:

ஹூவாய் நிறுவனம் ஹானர் வகையை சேரந்த 4 எக்ஸ் ஸ்மார்ட்போனின் ப்ளாஷ் விற்பனையை மார்ச் 24 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு அறிவித்தது. இம்முறை 24 ஆம் தேதி துவங்கிய முன்பதிவு 29 ஆம் தேதி நள்ளிரவு வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டு, இது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை கடந்துள்ளது.

60 நொடிகளில் ஒரு லட்சம் முன்பதிவுகளை கடந்தது ஹூவாய் ஹானர் 4எக்ஸ்

மார்ச் மாதம் 30 ஆம் தேதி ஹானர் 4எக்ஸ் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் ப்ரெத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது, ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் 30 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் போனினை வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.10,499க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹானர் நிறுவனம் முன்பதிவு செய்தவர்களை தேர்வு செய்து லிமிட்டெட் எடிஷன் போன்களை 1 ரூபாய்க்கு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Huawei Honor 4X registrations cross 100,000 in 24 hrs
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்