பார்சிலோனாவில் மூன்று கருவிகளை வெளியிட்டது ஹெச்டிசி நிறுவனம்

By Meganathan
|

பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் ஹெச்டி நிறுவனம் மூன்று கருவிகளை வெளியிட்டது. அதிகம் எதிரிபார்க்கப்பட்ட ஹெச்டிசி ஒன் எம்9 ஸ்மார்ட்போன், ஹெச்டிசி பிட்னஸ் டிராக்கிங் ஸ்மார்ட்பேன்ட் மற்றும் வைவ் விர்ச்சுவல் ரியால்டி ஹெட்செட் போன்றவைகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அடுத்து வரும் ஸ்லைடர்களில் ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய கருவிகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்..

ஹெச்டிசி ஒன் எம்9 ஸ்மார்ட்போன்

ஹெச்டிசி ஒன் எம்9 ஸ்மார்ட்போன்

டிஸ்ப்ளேவை பொருத்த வரை 5 இன்ச் 1080 டிஸ்ப்ளே கொண்டிருப்பதோடு அல்ட்ரா பிக்சல் கமேரா மற்றும் புதிய பிஎஸ்ஐ சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

20 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் சஃப்பையர் லென்ஸ் கவர் கொண்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

ஸ்னாப்டிராகன் 810 ஆக்டாகோர் 64-பிட் சிப்செட் மற்றும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டுள்ளது. மேலு் 3ஜிபி ராம், 32 ஜிபி இன்ட்ரனல் மெமரி மற்றும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

பேட்டரி

பேட்டரி

2840 எம்ஏஎஹ் பேட்டரி கொண்ட எம்9 2ஜியில் 391 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் 3ஜியில் 402 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு ரூ.40,068 என விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ஹெச்டிசி பிட்னஸ் டிராக்கிங் ஸ்மார்ட்பேன்ட்

ஹெச்டிசி பிட்னஸ் டிராக்கிங் ஸ்மார்ட்பேன்ட்

ஹெச்டிசி க்ரிப் 1.8 இன்ச் PMOLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டுள்ளதோடு மற்ற பிட்னஸ் பேன்ட்களை போன்று ஸ்மார்ட்போன் நோட்டிபிகேஷன்களை அப்டேட் செய்யும்.

கைரோஸ்கோப்

கைரோஸ்கோப்

புதிய ஸ்மார்ட்பேன்டில் கைரோஸ்கோப், அக்ஸசெல்லோ மீட்டர் போன்ற அம்சங்கள் இருக்கின்றது.

பேட்டரி

பேட்டரி

100 எம்ஏஎஹ் பேட்டரி கொண்ட ஹெச்டிசி க்ரிப் ஜிபிஎஸ் ஆன் செய்யப்பட்டிருக்கும் நிலையில் 5 மணி நேரமும் ஜிபிஎஸ் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் நிலையில் 2.5 நாள் வரை பேக்கப் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்ட்சி வைவ் விர்ச்சுவல் ரியால்டி ஹெட்செட்

ஹெச்ட்சி வைவ் விர்ச்சுவல் ரியால்டி ஹெட்செட்

சாம்சங் கேலக்ஸி கியர் போன்று இல்லாமல் ஹெச்டிசி வைவ் எவ்வித ஸ்மார்ட்போனும் இல்லாமல் கணினி மூலம் இயங்குகின்றது.

ஹெச்டிசி வைவ்

ஹெச்டிசி வைவ்

ஹெச்டிசி நிறுவனத்தின் முதல் விர்ச்சுவல் ரியால்டி ஹெட்செட் மற்ற நிறுவனங்களுக்கு எந்த அளவு போட்டியை கொடுக்கும் என்பது கொஞ்ச நாட்களில் தெரிந்து விடும்.

Best Mobiles in India

English summary
HTC Unveils three devices in MWC 2015. Here you will find the whole lot of details on three devices unveiled by HTC at MWC 2015.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X