ஆபத்து : வாழ்க்கையை வறுத்தெடுக்கும் வாட்ஸ்ஆப்.!!

Written by: Aruna Saravanan

இமெயில் மற்றும் கடிதங்களில் உங்கள் காதலையும் உணர்வுகளையும் அனுப்பும் காலம் முடிந்து விட்டது. இப்பொழுது வாட்ஸ் அப் காலம். இது வரம் என்று நினைக்கும் பலருக்கு தெரிவதில்லை இது ஒருவிதத்தில் சாபம் என்று. இதில்தான் பல பிரச்சனைகள் உள்ளது. எப்படி இவ்வகை தகவல் தொடர்பு உங்கள் உறவுகளை பாதிக்கின்றது என்பது பற்றி இங்கு காண்போம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ப்ளூ டிக்

காதலி ஒருத்தி தன் மெசேஜை காதலன் கவனிக்க வில்லையென்று குற்றம் சொன்னால் நான் மெசேஜை பார்க்க வில்லை என்று அவன் கூறி தப்பித்து விட முடியும். இதற்கு என்றே வந்துவிட்டது ப்ளூ டிக். இது மெசேஜ் கவனிக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கும். ஆகவே காதலர்களே உஷார். பொய் சொல்லி மாட்டிக் கொள்ள வேண்டாம்.

லாஸ்ட் சீன்

உங்கள் மனம் கவர்ந்தவருக்கு நீங்கள் குட் நைட் சொல்லி விட்டீர்கள். அதன் பின் உங்கள் பழைய பள்ளி தோழனிடமிருந்து மெசேஜ் வருகின்றது. நீங்கள் அவருக்கு பதில் அளித்து கொண்டிருக்கும் போது உங்களவர் நினைக்கலாம் "குட் நைட் சொல்லிய பின் யாருடன் பேச்சு" என்று. ஏனென்றால் இந்த லாஸ்ட் சீனில் கடைசியாக பயன்படுத்திய நேரம் தெரியும்.

லாஸ்ட் சீன் மறைக்க

மேலே கூறிய பிரச்ச்னையை சரி செய்ய "last seen" என்பதை மறைப்பதால் நீங்கள் கடைசியாக எந்த மெசேஜ் பார்த்தீர்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு last seen என்பதை மறைக்க வேண்டும் அதாவது invisible செய்ய வேண்டும் என்று செய்தாலும் பிரச்சனை முடிவதில்லை. இதனால் ஏன் நீங்கள் மறைத்தீர்கள் என்பது கூட பிரச்சனையாகும்.

உரையாடளை முடிக்க K

மெசேஜில் முடிவு கொடுக்க ஓகே என்று குறிக்கும் வழக்கம் உண்டு. சில நேரத்தில் வாட்ஸ் ஆப் மொழியில் சிலர் கே என்று அனுப்புகின்றனர். இது புரியாத சிலர் கே என்றால் killing அதாவது கொல்வேன் என்ற அர்த்தத்தை எடுத்து கொண்டு உங்களை மோசமானவர்களாக நினைக்கும் ஆபத்தும் உள்ளது.

குழு மற்று 500 மெசேஜ்கள்

உங்களுக்கு தெரிந்தும் தெரியாத பல் வேறு குழுவை சேர்ந்த நபர்கள் மற்றும் அவர்களின் தேவையில்லாத 500 மெசேஜ்களும் உங்களுக்கு பல சமயங்களில் எரிச்சலூட்டும். சில நேரங்களில் அவர்களுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கும்.

குற்றவுணர்வூட்டும் பழக்கம்

உங்கள் மனம்கவர்ந்த நபருடன் நீங்கள் சண்டை போட்டு அழும் போது உங்களுக்கு ஆறுதல் கிடைக்க ஏங்குவீர்கள். அப்பொழுது தற்காலிகமாக வேறு ஒருவருடன் பழகி ஆறுதல் அடைய எண்ணினால் உஷார். நீங்கள் கண்காணிக்க படுகின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

பார்க்க மட்டுமே முடியும்

எல்லாவற்றையும் விட மெசேஜ்களை அனுப்ப முடியும் பெற முடியும் ஆனால் கண்களாலும் கைகளாலும் மட்டுமே. உண்மையான ஆறுதலை நேருக்கு நேர் சந்தித்தால் மட்டுமே பெற முடியும். உயிர் அற்ற மொபைல் போனால் உங்கள் உணர்வுகளை எடுத்து செல்ல முடியாது. ஆகவே என்றும் உயிரில் இணைந்து பழகுங்கள் போதும் வாழ்கை இனிக்கும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
How WhatsApp is ruining your life Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்