மொபைல் மூலம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டையை நேரலையில் காண்பது எப்படி

Posted by:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்கி மிகவும் உற்சாகமாக நடைபெற்று வருகின்றது. தோனி தலைமையிலான இந்திய அணி இம்முறை கோப்பையை தக்க வைத்து கொள்ளும் உத்வேகத்துடன் களம் கண்டு முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்றும் விட்டது.

தற்சமயம் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் உலக கோப்பை போட்டிகளை நேரலையில் காண்பது எப்படி என்று தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். வீட்டில் இருக்கும் போது தொலைகாட்சியில் பார்க்க முடியும், ஆனால் வேறு இடங்களில் இருக்கும் போது உங்களிடம் இருக்கும் கேஜெட்களில் எப்படி பார்க்க வேண்டும் என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இந்தியா

இந்தியாவில் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் Star Sports தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன, இதோடு பல மொழி சேனல்களும் தங்கள் மொழிகளில் ஒளிபரப்பி வருகின்றன. இவை அல்லாமல் இணையங்களிலும் பார்க்க முடியும்.

Star Sports.Com

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணை. தளத்தில் போட்டிகளை நேரலையில் காண முடியும் Star Sports 

Star Sports subscription

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சப்ஸ்க்ரிப்ஷன் பக்கத்திற்கு சென்று அதன் விவரங்களை பார்க்க முடியும், இங்கு 53 ஒரு நாள் போட்டிகளை ரூ.120க்கு பார்க்க முடியும். இது இல்லாமல் மற்ற ப்ரவுஸர்களிலும் போட்டியை காணலாம்.

Buy Now

பதிவு செய்ய Buy Now என்ற பட்டனை க்ளிக் செய்து பணம் செலுத்துங்கள்.

பணம்

பணம் செலுத்தி முடித்த பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இணையதளம் சென்று லாக் இன் செய்ய வேண்டும்.

சந்தா

சந்தா செலுத்தும் முறை இந்தியாவிற்கு மட்டும் தான் பொருந்தும், மற்றும் நாடுகளுக்கு இவை மாறுபடும்.

இலவசம்

ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்து வீடியோக்களை பார்க்க முடியும், ஆனால் இவை சில நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பாகும். இருந்து அதிக தரத்துடன் கிடைப்பதோடு இலவசமாகவும் இருக்கின்றது.

டாட்டா ஸ்கை

ஒரு வேளை நீங்கள் டாட்டா ஸ்கை சந்தா தாரராக இருக்கும் பட்சத்தில் ஐஓஎஸ் அல்லது ஆன்டிராய்டு செயலியை பயன்படுத்தி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியை உங்களது மொபைலில் பார்க்க முடியும், இதற்கு மாதம் ரூ.60 செலுத்த வேண்டும்.

வெளிநாடு

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் FAQ பகுதியில் உலக கோப்பை போட்டிகளின் நேரலையை பார்ப்பது எப்படி என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இதை பார்த்து தங்களது நாடுகளில் போட்டியை காணலாம்.

வெற்றி

மேலே குறப்பிடப்பட்டவைகளில் உங்களுக்கு பொருத்தமான முறையில் உலக கோப்பை போட்டிகளை பாருங்கள், இந்தியா வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை தக்க வைக்க இந்திய அணிக்கு ஊக்கமளிப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
How to Watch 2015 Cricket World Cup Live. Check out here How to Watch 2015 Cricket World Cup Live on your smartphone, tablet, laptop or computers.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்