ஆண்ட்ராய்டில் பேக்கிரவுண்டு ஆப்ஸ்களை நிறுத்துவது எப்படி?

Written By:

பொதுவாக இன்றைய ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பேக்கப் என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகின்றது. கணினிகளுக்கு நிகரான செயல்களை சாதாரணமாகப் புரியும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பிரச்சனையை மட்டும் யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு கருவியிலும் அதிகளவு திறன் கொண்ட பேட்டரிகள் வழங்கப்பட்டாலும், பேக்கப் என்பது அதிகபட்சம் ஒரு நாள் மட்டுமே கிடைக்கின்றது. ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பேக்கப் தீர்ந்து போக முக்கிய காரணங்களில் ஒன்று பேக்கிரவுண்டு ஆப்ஸ் தான்.

ஸ்மார்ட்போனில் ஒரு ஆப் பயன்படுத்திய பின் வேறு ஒரு ஆப் பயன்படுத்தும் போது பின்னணியில் ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திய ஆப் இயங்கிக் கொண்டிருக்கும். இதனாலேயே உங்களுக்குத் தெரியாமல் உங்களது கருவியில் இருந்து சார்ஜ் தீர்ந்து கொண்டே போகும்.

இங்கு பேக்கிரவுண்டில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆப்ஸ்களை நிறுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போமா..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டெவலப்பர் ஆப்ஷன்

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோவிற்கு முந்தைய பதிப்பு இயங்குதளங்களில் செட்டிங்ஸ் -- பில்டு நம்பரை ஏழு அல்லது அதிக முறை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது டெவலப்பர் ஆப்ஷன்கள் அன்லாக் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யும் தகவல் கிடைக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிராசஸ்

பல கருவிகளிலும் இதற்கு அடுத்து பிராசசஸ் செட்டிங் காணப்படும். இதனை Settings > Developer Options > Processes சென்று பார்க்க முடியும். இந்த ஆப்ஷன் உங்களை ஒவ்வொரு ஆப்பும் எத்தகையளவு RAM பயன்படுத்துகின்றது என்பதைத் தெரிவிக்கும்.

அதிகம்

இங்கு அதிகப்படியான RAM பயன்படுத்தும் ஆப்களை பேக்கிரவுண்டில் நிறுத்தக் கோரும், இங்கு நீங்கள் நிறுத்தும் ஆப்களில் கவனமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் சில ஆப்கள் உங்களது கருவியினை கிராஷ் செய்யலாம்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புதிய கருவி

ஒரு வேலை புதிய கருவிகளைப் பயன்படுத்தினால் Settings > Developer options > Running services ஆப்ஷன் சென்று RAM அதிகம் பயன்படுத்தும் ஆப்களை பார்க்க முடியும். இதற்கு Services/Processes மெனுவில் இருந்தே செட்டிங்ஸ் ஆப்ஷனையும் கிளிக் செய்து running processes மற்றும் cached processes களிடையே மாற முடியும்.

டெவலப்பர் ஆப்ஷன்

சில கருவிகள் உங்களை டெவலப்பர் ஆப்ஷன் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. இதற்குக் கூகுளில் டெவலப்பர் ஆப்ஷனை அன்லாக் செய்வது எப்படி என்பதை அறிந்து கொண்டு மேலும் முயற்சிக்கலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்டாக் ஆண்ட்ராய்டு

ஒருவேலை ஸ்டாக் ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் பட்சத்தில் Settings > Memory > Memory used by apps ஆப்ஷன்களுக்குச் சென்று நேரடியாக ஆப்களை நிறுத்த முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
HOW TO STOP APPS FROM RUNNING IN THE BACKGROUND ON ANDROID
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்