உடல் நலத்தை சீர்குலைக்கும் ஸ்மார்ட்போன்.!!

Written By:

உலக மக்கள் தொகையில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போன் இல்லாமல் இன்று எதுவும் அசையாது என்ற சூழலில் இந்த கருவியை பயன்படுத்த வேண்டாம் என யாரிடமும் கூற முடியாது.

தினமும் 15,00,000 பேர் புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை வாங்கும் நிலையில் ஸ்மார்ட்போன் கருவிகள் மூலம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உரக்க சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.

அனைவரது கைகளில் எந்நேரமும் தவழும் அழகிய குழந்தை போன்றிருக்கும் ஸ்மார்ட்போன் கருவிகள் எவ்வாறு மக்களுக்கு தீங்கு விளைவிக்கின்றது என்பது குறித்த விரிவான தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ரேடியேஷன்

செல்போன் கருவிகளில் இருந்து வெளியாகும் ரேடியேஷன் மனிதர்களுக்கு புற்று நோய் உண்டாக்கக்கூடியது என உலக சுகாதார மையம் கருதுகின்றது. இதன் பாதிப்பினை ஓரளவு குறைக்க இரவில் தூங்கும் போது செல்போன் கருவிகளை ஆறு அடி தூரத்தில் வைத்து விட்டு உறங்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகின்றது.

கண்பார்வை

நீண்ட நேர ஸ்மார்ட்போன் பயன்பாடு மங்கலான கண் பார்வை, கண் வலி மற்றும் கண்களின் ஈரப்பதத்தை குறைப்பது போன்ற கோளாறுகளுக்கு வழி செய்யும். மேலும் கண் பார்வையில் பிரச்சனை இருப்போருக்கு இதன் பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கழுத்து வலி

ஸ்மாரா்ட்போன் மூலம் சாட்டிங் செய்வோர் அதன் திரையை குனிந்தவாரே பயன்படுத்துவதால் கழுத்து வலி ஏற்படும். எந்நேரமும் குறுந்தகவல் அனுப்புவோருக்கு டெக்ஸ்ட் நெக் வகை கழுத்து வலி ஏற்படும் அபாயம் அதிகம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஆகும்.

மன அழுத்தம்

ஸ்மார்ட்போன் மூலம் தகவல் பரிமாற்றம் மற்றும் அறிவை வளர்த்து கொள்வது நன்மை விளைவிப்பதாக நீங்கள் கருதினாலும், அதிகப்படியான பயன்பாடு மன அழுத்தம் உண்டாக காரணமாகும். இதை தவிர்க்க முடிந்த வரை ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் போது இடைவெளி எடுத்து கொள்வது நல்லது.

தூக்கம்

ஸ்மார்ட்போன் திரையில் இருக்கும் எல்இடி மின்விளக்குகள் தூக்கத்தை கெடுக்கும். இதனால் உறங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் ஸ்மார்ட்போன் பயன்பாட்டினை தவிர்க்கலாம்.

கிருமிகள்

கடைசியாக உங்களது ஸ்மார்ட்போனினை எப்போது சுத்தம் செய்தீர்கள். காலிஃபார்ம் என்ற வகை கிருமி பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

உடல் எடை

ஸ்மார்ட்போன் பயன்பாடு உடல் ரீதியான பணிகளை செய்ய விடாது என்பதால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் இருக்கின்றது. இதனால் தினமும் முறையான உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

உறவு

ஸ்மார்ட்போன் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் போது உறவுகளில் விரிசல் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. காதலர்கள் கவனமாக இருப்பது நல்லது.

வாகனம்

வாகன ஓட்டும் போது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுகின்றது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
how smartphone is affecting your health
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்