ஜியோவை ஓரங்கட்டுங்க, ஆர்காம் அதிரடியை கொஞ்சம் கவனியுங்க.!

ஆர்காம் வழங்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை ரூ.149/-ல் பெறுவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பு.!

Written By:

'இவை' அனைத்திற்குமே ஆதி காரணமாக விளங்குவது ஜியோ அறிமுகம் தான் என்றாலும் கூட, ஆரம்பத்தில் முந்தி ஓடிய ஜியோவை எப்படியோ ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற பிற போட்டியாளர்கள் மூச்சுப்பிடிக்க உடன் ஓடி, சற்று ஈடு கொடுத்த நிலையில் தற்போது ஆர்காம் (ரிலையன்ஸ் கம்யூனிட்கேஷன்ஸ்) நிறுவனமும் ஜியோவிற்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளது.

இந்திய தொலைத் தொடர்புத் துறையில் தொடர்ச்சியான போர் நிலவுகிறது, குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்திற்கு பிறகு ஒரு கட்டண யுத்தமே நடைபெறுகிறது. கிட்டத்தட்ட தினமும் புதுப்புது திட்டங்களை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் களம் இறக்கிய வண்ணம் உள்ளன.

எது எப்படி பார்த்தாலும் இறுதியில் நுகர்வோர்களுக்கு தான் பயன் என்பதற்கு சேவை வழங்குநர்களின் சலுகைகள் தான் சாட்சி. சரி, இந்த கட்டண 'கிரிக்கெட்' போட்டியில் ஆர்காம் நிறுவனம் அடித்த 'சிக்ஸர்' என்ன..?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வரம்பற்ற அழைப்பு

ஏர்டெல் சமீபத்தில் அறிமுகம் செய்த வரம்பற்ற திட்டமான ரூ.148/- பேக்கை போலவே தான் இந்த ஆர்காம் நிறுவனத்தின் ரூ.149/- பேக், இது வரம்பற்ற உள்ளூர் குரல் அழைப்பு + 300 எம்பி அளவிலான 4ஜி டேட்டா ஆகியவைகளை வழங்குகிறது. இதன் மூலம் ஆர்காம் அதன் வரம்பற்ற அழைப்பு திட்ட சகாப்தத்தை தொடங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ஜிஎஸ்எம் ப்ரீபெய்ட்

28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த வாய்ப்பை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரிலையன்ஸ் ஜிஎஸ்எம் ப்ரீபெய்ட் மொபைல் சந்தாதாரர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

1 மாதம் செல்லுபடியாகும்

மேலும், ஆர்காம் மூன்று வரம்பற்ற குரல் அழைப்பு தரவு சேர்க்கை திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. ப்ரீபெய்ட் ஜிஎஸ்எம் பயனர்கள் 1 மாதம் செல்லுபடியாகும் வரம்பற்ற குரல் அழைப்பு + இணைய தரவு பெற ரூ.149, ரூ. 299 மற்றும் ரூ. 499/- ஆகிய திட்டங்களில் ஒரு தேர்வை நிகழ்த்திக் கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆக்டிவேட் செய்வது எப்படி.?

முதலில் நீங்கள் உங்கள் ரிலையன்ஸ் ஜிஎஸ்எம் ப்ரீபெய்ட் மொபைல் எண்ணிற்கு ரூ.149/- ரீசார்ஜ் நிகழ்த்த வேண்டும். உங்கள் மெயின் பேலன்ஸில் போதுமான பணம் இருப்பின் நீங்களே செயல்முறையை தொடங்கலாம்.

வலைத்தளத்தில் ரீசார்ஜ்

ஒருவேளை போதுமான தொகை இல்லை என்றால் நீங்கள் எப்போதும் வேண்டுமானால் உங்கள் ஜிஎஸ்எம் மொபைல் எண்ணிற்கு http://www.rcom.co.in/Rcom/personal/home/index.html என்ற வலைத்தளத்தில் ரீசார்ஜ் செய்யலாம். உடன் வலைத்தளத்தில் பிற ஆர் காம் சலுகைகளின் விவரங்களையும் நீங்கள் பெறலாம்.

எந்த நெட்வொர்க் உடனும்

சேவை செயல்படுத்தப்பட்ட பின்னர் நீங்கள் எந்த வரம்பும் இல்லாமல் உள்ளூர் மற்றும் வெளியூர் எண்கள் (லேண்ட்லைன் எண்கள் உட்பட) அனைத்திற்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை அனுபவிக்கலாம். இந்த வாய்ப்பை பிணையத்தில் உள்ள மற்றும் இந்தியா முழுவதும் உள்ள மற்ற எந்த நெட்வொர்க் உடனும் செல்லுபடியாகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
How to Get Unlimited RComm Voice Calling for Just Rs. 149. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்