உபயோகிக்காத ஏர்டெல் எண்ணில் ரூ.19/-ல் 3ஜிபி பெறுவது எப்படி..?

இந்திய தொலைத்தொடர்பு துறையில் வியாபார யுத்தம் நடக்கின்ற வேளையில் ஏர்டெல் ரூ.19/-க்கு 3ஜிபி அளவிலான டேட்டா என்ற ஒரு கம்-பேக் சலுகையை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

Written By:

கடந்த இரண்டு மாதங்களாக பல வகையான நுழைவு நிலை சலுகைகளை ஏர்டெல் வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் எந்த அளவிலான 4ஜி யுத்தம் நடக்கிறது என்பதை தெளிவாக அறிந்துக்கொள்ள முடிகிறது. இப்போது ஏர்டெல் அதன் பழைய பயனர்களை குறி வைத்து ஒரு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

அந்த சலுகைகள் பற்றிய விரிவான தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பழைய ஏர்டெல் வாடிக்கையாளர்கள்

ஒருவேளை நீங்கள் ஒரு பழைய ஏர்டெல் வாடிக்கையாளராக இருப்பின் அல்லது உங்களது சேவையில் விருப்பமின்றி ஏர்டெல் சிம் கார்ட் தனை நீண்ட காலமாக நீங்கள் பயன்படுத்தவேயில்லை எனில் இந்த ஏர்டெல் சலுகை நிச்சயமாக உங்களுக்கானது தான்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பழைய ஏர்டெல் சிம் கார்ட்

ஏர்டெல் வழங்கும் இந்த கம்-பேக் ஆபர் பற்றிய தகவல்களை அறிந்துக்கொள்ளும் முன்னர் முதல் வேலையாக நீங்கள் தூசி தட்டி பயன்படுத்தப் போகும் பழைய ஏர்டெல் சிம் கார்ட் பத்திரமாக இருக்கிறதா எங்கு இருக்கிறது என்பதை நினைவேற்றிக் கொள்ளுங்கள்.

கம் பேக் ஆபர்

பார்தி ஏர்டெல் வழங்கும் இந்த புதிய திட்டத்தின் மூலம் பழைய ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.19/-க்கு ரீசார்ஜ் செய்ய ஒரு முழு மாதத்திற்கு இலவசமாக 3ஜிபி அளவிலான இணைய அணுகலை அனுபவிக்க முடியும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பெறுவது எப்படி.?

நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தும் உங்கள் மெயின் அக்கவுண்டில் இருந்து வெறும் ரூ.19/-க்கு உங்கள் பழைய ஏர்டெல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்யவும், பின்னர் வழங்கப்படும் இலவச டேட்டாவை அனுபவிக்கவும்.

விதிகள் கிடையாது

ஏர்டெல் வழங்கும் இந்த வாய்ப்பில் எந்த விதமான விதிகள் மற்றும் நிபந்தனைகளும் கிடையாது உங்களுக்கு கிடைக்கும் டேட்டாவை நீங்கள் 24 மணி நேரமும் அனுபவிக்க முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கால் ரெட் ஆபர்

இந்த சலுகையில் இணைய போனஸ் உடன் சேர்த்து, நீங்கள் செய்யும் முதல் ரீசார்ஜிற்கு மட்டும் ஒரு கால் ரெட் ஆபர் வழங்கப்படும்.

மாதாந்திர தவணை

வின்பேக் ஆபர் என்ற பெயரின் கீழ் ஏர்டெல் வழங்கும் இந்த சலுகையின் ஒவ்வொரு இணைய போனஸும் 30 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் மாதம் 1 ஜிபி என 3 மாதாந்திர தவணையில் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

4000

இந்த சலுகையில் நீங்கள் அதிருப்தியுற்றிருந்தார்கள் என்றால் ஏர்டெல் பயனர்கள் இந்த வாய்ப்பை ஸ்டாப் (STOP) என்று டைப் செய்து 4000 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுபவத்தின் மூலம் நிறுத்துக் கொள்ளலாம்

1212

இந்த சலுகை பற்றிய நேரடியான விளக்கத்தினை பெற ஏர்டெல் பயனர்கள் கட்டணமில்லா எண் ஆன 1212 என்ற எண்ணிற்கு டயல் செய்யலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
How to Get 3GB Free Internet on Your Unused Airtel Number at Just Rs. 19. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்