இரண்டு அடுக்குப் பாதுகாப்பு வளையத்தில் வாட்ஸ்ஆப்.!

வாட்ஸ்ஆப் பயனர்கள் தங்களின் அக்கவுண்ட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளப் புதிய இரண்டு அடுக்குப் பாதுகாப்பு வழிமுறையினை அறிவித்துள்ளது.

Written By:

வாட்ஸ்ஆப் செயலியில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் முறை துவங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பீட்டா பதிப்பில் மட்டும் இந்த அம்சம் தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டில் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புதிய வழிமுறை துவங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பதிப்பு

இதனால் பயனர்கள் அக்கவுண்ட் செட்டப் செய்யும் போது மற்ற கருவியில் இருந்து ஆறு இலக்கு பாஸ்கோடு ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும். டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் அம்சத்தினைச் செட்டப் செய்ய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பினை பயன்படுத்த வேண்டும். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பீட்டா பதிப்பிற்குப் பதிவு செய்ய முடியும்.

கூகுள் பிளே ஸ்டோர்

உங்களின் ஸ்மார்ட்போனின் பிளே ஸ்டோரில் வாட்ஸ்ஆப் பக்கத்தினைத் திறந்து கீழ் பக்கம் ஸ்க்ரால் செய்ய வேண்டும், அங்குக் காணப்படும் சைன் அப் பட்டனை கிளிக் செய்தால் வேலை முடிந்தது.

வாட்ஸ்ஆப் பீட்டா

பீட்டா ஆப் சைன் அப் செய்ததும் வாட்ஸ்ஆப் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் -- டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இங்கு ஆறு இலக்க கோடினை பதிவு செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பாதுகாப்பு

இந்தக் கோடு உங்களது கணக்கினை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்கச் செய்யும். இதனால் புதிய கருவியில் வாட்ஸ்ஆப் செட்டப் செய்யும் போது இந்த ஆறு இலக்க கோடினை பதிவு செய்யக் கோரும்.

மின்னஞ்சல்

டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செய்ததும் மின்னஞ்சல் முகவரியையும் வழங்கக் கோரும் ஆப்ஷன் தெரியும். மின்னஞ்சலுடன் லின்க் செய்ததும் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் இல்லாமல் மின்னஞ்சல் லின் கொண்டு வெரிஃபை செய்ய முடியும்.

முகவரி

மின்னஞ்சல் மூலம் வெரிஃபை செய்யக் கோரும் போது சரியான மின்னஞ்சல் முகவரியினை வழங்க வேண்டும் என வாட்ஸ்ஆப் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் தவறுதலாக அக்கவுண்ட் லாக் செய்யப்படுவதைத் தவிர்க்க முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
How to enable WhatsApp Two-step verification
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்