அழுக்கு ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்ய எளிய வழிமுறைகள்..!

|

டாய்லெட் பேப்பரில் இருக்கும் கிருமிகளை விட அடிக்கடி தொடப்படும் மொபைல் போன்களில் தான் கிருமிகள் அதிகம் என்கிறது பல ஆராய்ச்சிகள். அப்படி பார்த்தால் டாய்லெட்டில் நம் காதுகளையை கொண்டு போய் வைப்பதற்கு சமம், அப்படித்தானே..!

ஒரு நிமிடத்திற்க்குள் 'பறந்து' வரும் ஆம்புலன்ஸ்..!

அவ்வளவு அசுத்தமாகும் அளவிற்கு நாம் நமது ஸ்மார்ட் போன்களை இடைவிடாது பயன்படுத்திக் கொண்டே இருக்கின்றோம். அதை சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை. அதற்கு காரணம், அது ஏதோ ரொம்ப டெக்னீக்கலான வேலை என்று நாம் நினைப்பதால்தான்.

ஆனால் அப்படி ஒன்றுமில்லை. ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்வது ஒன்றும் பெரிய கம்பசூத்திரமில்லை, ரொம்ப ஈஸி தான். முயற்சி பண்ணிலாம் வாங்க..!

சுத்தம் செய்ய தேவையான பொருட்கள் :

சுத்தம் செய்ய தேவையான பொருட்கள் :

பஞ்சு கலக்காத மைக்ரோ ஃபைபர் துணி, காது சுத்தம் செய்ய உதவும் காட்டன் ஸ்வாப்ஸ், டிஸ்டில்டு வாட்டர், ரப்பிங் (ஐசோப்புறப்பில்) ஆல்கஹால்.

முதல் வேலை :

முதல் வேலை :

சுத்தம் செய்தல் என்று வந்து விட்டால், முதலில் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட வேண்டும்.

கேஸ்களை அகற்றுங்கள் :

கேஸ்களை அகற்றுங்கள் :

போன் கேஸ்கள் மற்றும் கவர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். அதற்கு உள்ளேயே தூசிகள் குவிந்து கிடப்பதை காணலாம்.

பேட்டரி மற்றும் பேனல் :

பேட்டரி மற்றும் பேனல் :

பின் புறம் உள்ள பேனல் மற்றும் பேட்டரியையும் கழற்றி விடுங்கள்.

ஸ்க்ரீன் கார்டு :

ஸ்க்ரீன் கார்டு :

ஸ்க்ரீன் ப்ரொடெக்ட்டரை விளக்கும் போது அதிக கவனம் தேவை, சிறிய கீறல்கள் ஏற்படும். ஏற்கனவே பெரிய கீறல்கள், விரிசல்கள் கொண்ட மொபைல்களின் ஸ்க்ரீன் கார்டுகளை விளக்காமலேயே இருப்பது நல்லது.

 கீப்பேட்டில் ஆரம்பிக்கலாம் :

கீப்பேட்டில் ஆரம்பிக்கலாம் :

காட்டன் ஸ்வாப் ஒன்றை எடுத்து அதை டிஸ்டில்டு ரப்பிங் ஆல்கஹாலில் மூழ்கி எடுத்து அதிக வலுவுடன் அழுத்தாமல், மெதுவாக அனைத்து பட்டன்களுக்கு உள்ளேயும் விட்டு நன்றாக துடைக்கவும்.

பின்புற பேனல் :

பின்புற பேனல் :

பிளாஸ்டிக்காக இருந்தால் டிஸ்டில்டு ரப்பிங் ஆல்கஹாலில் மூழ்கி எடுத்து, மெட்டலாக இருந்தால் தண்ணீரில் மூழ்கி எடுத்தும் துடைக்கலாம். அவ்வாறே பேட்டரி கவர் பகுதியையும் சுத்தம் செய்ய வேண்டும்

மறுமுறை வெறும் காட்டன் ஸ்வாப் :

மறுமுறை வெறும் காட்டன் ஸ்வாப் :

திரவங்கள் கொண்டு துடைத்து முடித்த பின் வெறும் காட்டன் ஸ்வாப் கொண்டு மறுமுறை துடைக்க வேண்டும்.

கேமிரா மற்றும் ஃப்ளாஷ் :

கேமிரா மற்றும் ஃப்ளாஷ் :

காட்டன் ஸ்வாப்பை தண்ணீரில் நனைத்து கேமிரா மற்றும் ஃப்ளாஷ்களை, ஸ்வாப்பை சுழற்றிவதின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

மெதுவாக துடைக்க வேண்டும் :

மெதுவாக துடைக்க வேண்டும் :

பெரும்பாலான பகுதிகள் சுத்தமாகி இருக்கும், இனி ஸ்க்ரீன் மற்றும் பின்புற பேனலை மட்டும் லேசாக கவனித்தால் போதும். அதை பஞ்சு கலக்காத மைக்ரோ ஃபைபர் துணி கொண்டு மெதுவாக துடைக்க வேண்டும். ஸ்க்ரீன் கார்டை கழட்டி விட்டோம் என்ற ஞாபக்ம் இருக்கட்டும் இல்லையெனில் ஸ்க்ராட்ச் உறுதி.

ஃபைனல் டச் :

ஃபைனல் டச் :

கடைசியாக உங்கள் போன் பேனல் அல்லது கவர்களையும் டிஸ்டில்டு ரப்பிங் ஆல்கஹாலில் மூழ்கி எடுத்த காட்டன் ஸ்வாப் மூலம் சுத்தம் செய்யுங்கள், பளபளக்கும் உங்கள் ஸ்மார்ட் போன்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here some easy ideas to clean your dirty smart phones. They are interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X