பிஎஸ்என்எல் டேட்டா யூசேஜ் சரி பார்ப்பது எப்படி?

By Meganathan
|

கட்டணம் செலுத்திய டேட்டா பேக் தீர்ந்து போவது அனைவருக்கும் சங்கடமான செய்தி தான். இலவச இண்டர்நெட் தீர்ந்து போனதும், பயன்படுத்தும் ஒவ்வொரு எம்பி டேட்டாவிற்கும் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும்.

கூடுதல் கட்டணம் செலுத்தாமல் இருக்க இண்டர்நெட் பயன்பாடு குறித்து அவ்வப்போது சரி செய்து கொண்டே இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இது பிஎஸ்என்எல் நெட்வர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கும் பொருந்தும்.

தற்சமயம் பிஎஸ்என்எல் நெட்வர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எனில் உங்களது நெட்வர்க் பயன்பாடு குறித்து தகவல் அறிந்து கொள்வது எப்படி என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

பிஎஸ்என்எல் சேவை

பிஎஸ்என்எல் சேவை

நீங்கள் பயன்படுத்திய பிஎஸ்என்எல் டேட்டா குறித்து அறிந்து கொள்ள ஆன்லைன் சேவை மையம் பயன்படுத்தலாம். பிஎஸ்என்எல் Selfcare portal தளத்தில் பதிவு செய்து பிராட்பேண்ட் பயன்பாடு, லேண்ட்லைன் பயன்பாடு போன்றவற்றின் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த சேவையைப் பயன்படுத்தி திட்டத்தினை மாற்றுவது, குற்றச்சாட்டு தெரிவித்தல், கட்டண ரசீதுகளைப் பார்த்தல், கட்டணம் செலுத்துதல், ப்ரோபைல் அப்டேட் போன்றவற்றையும் மேற்கொள்ள முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டேட்டா யூசேஜ் சரி பார்ப்பது எப்படி

டேட்டா யூசேஜ் சரி பார்ப்பது எப்படி

ஆன்லைன் சேவை மையத்தில் சைன் இன் செய்ததும், Dashboard -- Services -- Check My Broadband Unbilled Usage Details ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் வசிக்கும் இடங்களுக்கு ஏற்ப பிஎஸ்என்எல் Selfcare portal தேர்வு செய்ய வேண்டும்.

http://selfcare.sdc.bsnl.co.in for South Zone
http://selfcare.ndc.bsnl.co.in for North Zone http://selfcare.wdc.bsnl.co.in for West Zone http://selfcare.edc.bsnl.co.in for East Zone

பதிவு செய்யும் முறை

பதிவு செய்யும் முறை

முதலில் லேண்ட்லைன் நம்பரை எஸ்எம்எஸ் அனுப்பிப் பதிவு செய்ய வேண்டும். இதற்கு 52295 என்ற எண்ணிற்குப் பின்வருமாறு தகவலை அனுப்ப வேண்டும். "REG" என டைப் செய்து இடைவெளி விட்டு உங்களது லேண்ட்லைன் நம்பர் மற்றும் தபால் எண் பதிவு செய்ய வேண்டும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மற்ற பயனர்கள் பதிவு செய்யும் முறை

மற்ற பயனர்கள் பதிவு செய்யும் முறை

பிஎஸ்என்எல் இல்லாமல் மற்ற நெட்வர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இதற்குப் பயனர்கள் தங்களது பிஎஸ்என்எல் லேண்ட்லைன் நம்பரை பதிவு செய்ய "REG" என டைப் செய்து இடைவெளி விட்டு உங்களது லேண்ட்லைன் நம்பர் மற்றும் தபால் எண் பதிவு செய்து 919448077777 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலம் அறிந்து கொள்ளுதல்

எஸ்எம்எஸ் மூலம் அறிந்து கொள்ளுதல்

பதிவு செய்து முடித்ததும் "BBU" என டைப் செய்து இடைவெளி விட்டு லேண்ட்லைன் நம்பர் மற்றும் தபால் எண் என்டர் செய்து 52295 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். பிஎஸ்என்எல் இல்லாமல் மற்ற நெட்வர்க் பயன்படுத்தும் பயனர்கள் "BBU" என டைப் செய்து இடைவெளி விட்டு லேண்ட்லைன் நம்பர் மற்றும் தபால் எண் என்டர் செய்து 09448077777 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
How to Check Data Usage on BSNL Broadband Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X