ஏர்டெல் 5ஜிபி இலவச டேட்டா சலுகையை பெறுவது எப்படி..? (வழிமுறைகள்)

Written By:

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் 4ஜி திட்டங்கள் மிக கடுமையான தொலைத்தொடர்பு துறை போட்டியை முன்னடத்தி செல்ல, ஒவ்வொரு நாளும் போட்டி இன்னும் கடுமையாகி கொண்டு போகிறது என்றே கூறலாம். ஆக பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களில் திருத்தங்கள் செய்யவும், சிறப்பு சலுகைகளை வழங்கவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

அப்படியாக ஏர்டெல் நிறுவனம் 5ஜிபி அளவிலான இலவச டேட்டா வழங்கும் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது இந்த சிறப்பு சலுகை பற்றிய விவரங்கள் மற்றும் அதனை பெறுவதுதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

குறிப்பிட்ட வழிமுறை :

2ஜி, 3ஜி மற்றும் 4ஜியில் பயன்படுத்திக்கொள்ள முடியும் இந்த சலுகையை ஏர்டெல் அறிவித்துள்ள குறிப்பிட்ட வழிமுறைகளை 'கட்டாயமாக' பின்பற்றினால் மட்டுமே பெற முடியும் என்ற விதிமுறைகளை ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது.

யூஎம்டிஸ் மோட் :

இந்த சலுகையின் மூலம் இன்டர்நெட் ப்ரவுசிங்தனை யூஎம்டிஸ் மோட் கொண்டும் (UMTS mode) பிரயோகிக்கலாம் அதற்கு உங்கள் போனில் யூஎம்டிஎஸ் செட்டிங்ஸ் சென்று - கனெக்ஷன்ஸ் - மோர் நெட்வெர்க்ஸ் - மொபைல் நெட்வெர்க்ஸ் - நெட்வெர்க் மோட் தேர்வு செய்து 2ஜி, 3ஜி அல்லது 4ஜியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த ஏர்டெல் திட்டத்தை பெறுவது எப்படி..?

செயல்முறை#01: மைஏர்டெல் ஆப் தனை டவுன்லோட் செய்யவும்.

செயல்முறை#02 :

டவுன்லோட் செய்த பின்பு உங்கள் ஏர்டெல் 10 இலக்க எண் கேட்கப்படும், அதை பதிவு செய்ய வேண்டும். உங்கள் எண் பதிவு செய்த பின்பு கிடைக்கப்பெறும் கிடைக்கப்பெறு ஓடிபி (OTP) அது சரிபார்க்கப்படும்.

செயல்முறை#03 :

பின் உங்களுக்கு 5ஜிபி இலவச டேட்டா திட்டம் சார்ந்த தகவல்கள் கிடைக்கும், அதை கிளிக் செய்து கீழ் தொகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

வழிமுறை #01 :

நீங்கள் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும், அதுவும் இந்த ரீசார்ஜ் ஆனது மைஏர்டெல் ஆப் மூலம் தான் நிகழ்த்தப்பட வேண்டும். இதை நிகழ்த்தியதும் உங்களுக்கு 1ஜிபி அளவிலான இலவச டேட்டா கிடைக்கும்.

வழிமுறை #02 :

பின்பு , விண்கே ம்யூஸிக் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும் பின்பு அதில் சுமார் 11 பாடல்களை ஒலிக்க வைத்தால் நீங்கள் மேலுமொரு 500எம்பி இலவச தரவை பெறுவீர்கள்.

வழிமுறை #03 :

பின்பு ரூ.100 அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை மைஏர்டெல் ஆப் வேலெட்டில் பரிமாற்றம் செய்ய கூடுதலாக 500எம்பி இலவச தரவை பெறுவீர்கள்.

வழிமுறை #04 :

பின்னர் வழங்கப்டும் சலுகை லின்க் மூலம் விண்க் கேம் ஆப் ஏபிகே-வை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு விருப்பமான ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.செய்தால் இலவசமாக கூடுதல் 700 எம்பி தரவு கிடைக்கும்.

வழிமுறை #05 :

பின்னர் பதிவிறக்க விண்க் மூவி ஆப் பதிவிறக்கம் செய்து ஜாஸ்பா மற்றும் பஜ்ரங்கி பைஜான் ஆகிய இரண்டு திரைபடங்களையும் பார்த்து முடிக்கவும் இலவசமாக 500 எம்பி + 500 எம்பி தரவை பெறுவீர்கள்.

வழிமுறை #06 :

பின்னர் உங்கள் ஏர்டெல் எண் கொண்ட நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு இருப்பின் அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 செய்ய உங்கள் ஏர்டெல் எண்ணிற்கு 500 எம்பி தரவு வரவு வைக்கப்படும்.

வழிமுறை #07 :

பின்னர் நீங்கள் ஏற்கனவே விண்க் ம்யூஸிக் ஆப்பை பதிவிறக்கம் செய்து விட்டதால் இப்போது அதிலிருந்து ஏதாவது ஒரு முழு ம்யூஸிக் ஆல்பம்தனை பதிவிறக்கம் செய்ய உங்களுக்கு 200 எம்பி கிடைக்கப்பெறும்.

வழிமுறை #08 :

பின்னர் மைஏர்டெல் ஆப் மூலம் வேறொரு பயனருக்கு ரூ.100 அல்லது அதற்கு மேற்பட்டஅளவிலான பணத்தை அனுப்பினால் நீங்கள் உடனடியாக 500எம்பி அளவிலான தரவை பெறுவீர்கள்.

சுமார் 4900 எம்பி :

இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற உங்களுக்கு இலவசமாக சுமார் 4900 எம்பி டேட்டா கிடைக்கும்.

விதிமுறைகள் :

30 செப்டம்பர் 2016 ஆம் தேதிக்கு முன்பு வரைதான் இது செல்லுபடியாகும் என்பதும் இந்த சலுகை மூலம் கிடக்கைப்பெறும் டேட்டாவை நள்ளிரவு 12 முதல் காலை 6 மணி வரையிலாக மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதும் இச்சலுகையின் விதிமுறைகள் ஆகும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
How to avail airtel s 5GB Free Internet Data. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்