உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கருவிகள்..!

By Meganathan
|

தொழில்நுட்ப சந்தையில் தினமும் பல கருவிகள் வெளியாகின்றன, என்றாலும் அவை அனைத்தும் வெற்றி பெருவதில்லை என்பதே உண்மை. நிலைமை இப்படி இருக்க சில நிறுவனங்களின் கருவிகள் மட்டும் தயாரிப்பு பணிகளில் இருக்கும் போதே பிரபலமாகி விடுவதோடு உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பையும் அதிகரித்து விடுகின்றது.

ரூ.10,000க்கு கிடைக்கும் பத்து 'சத்தான' ஸ்மார்ட்போன்கள்..!

அவ்வாறு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களின் சில கருவிகளின் பட்டியலை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்...

ஒன் ப்ளஸ் 2

ஒன் ப்ளஸ் 2

சந்தையில் கிடைக்கும் மற்ற ஆண்ட்ராய்டு கருவிகளை விட ஒன் ப்ளஸ் விலை குறைவாகவே இருக்கின்றது. இதன் காரணமாக விற்பனையிலும் வெலுத்து வாங்கும் இந்நிறுவனத்தின் அடுத்த கருவி இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாகின்றது.

விண்டோஸ் 10

விண்டோஸ் 10

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்டும் விண்டோஸ் 10 இயங்குதளமும் ஜூலை மாதம் வெளியாகும் என்றே கூறப்படுகின்றது, பெரும்பாலும் விண்டோஸ் 10 ஜூலை மாதம் 29 ஆம் தேதி வெளியாகலாம்.

ஆப்பிள் ஐபோன் 6எஸ்

ஆப்பிள் ஐபோன் 6எஸ்

ஆப்பிள் நிறுவனம் பொதுவாக செப்டம்பர் மாதம் தனது கருவிகளை வெளியிடும், இந்தாண்டும் மாற்றங்கள் இருக்காது என்பதோடு பெரும்பாலும் இது ஐபோன் 6எஸ் கருவியாகவே இருக்கும்.

ஐஓஎஸ் 9

ஐஓஎஸ் 9

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கருவிகளில் ஐஓஎஸ் 9 கட்டாயம் இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் புதிய இயங்குதளமான ஐஓஎஸ் 9 பட்டியலில் இணைந்திருக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி நோட் 5 மற்றும் எஸ்6 எட்ஜ் ப்ளஸ்

சாம்சங் கேலக்ஸி நோட் 5 மற்றும் எஸ்6 எட்ஜ் ப்ளஸ்

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி கருவிகளை ஐஎஃப்ஏ பொருட்காட்சியில் வெளியிடும் என்றே தெரிகின்றது. இந்த தொழில்நுட்ப விழா செப்டம்பர் 4-9 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றது.

மோட்டோ எக்ஸ் (ஜென் 3)

மோட்டோ எக்ஸ் (ஜென் 3)

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எக்ஸ் கருவியன் மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிட்டது. இப்போக்கில் இந்த ஆண்டும் எவ்வித மாற்றமும் இருக்காது என்றே தெரிகின்றது.

நெக்சஸ்

நெக்சஸ்

கடந்த இரு ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் நெக்சஸ் கருவிகளை அக்டோபர் மாதங்களில் வெளியிடுவதை வைத்து பார்க்கும் போது இந்தாண்டும் நெக்சஸ் கருவிகளை எதிர்பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு எம்

ஆண்ட்ராய்டு எம்

கூகுள் நிறுவனத்தின் அடுத்த ஆண்ட்ராய்டு இயங்குதளமான ஆண்ட்ராய்டு எம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் புதிய நெக்சஸ் கருவியில் ஆண்ட்ராய்டு எம் இயங்குதளம் முதலில் வழங்கப்படலாம்.

ஐபேட்

ஐபேட்

ஆப்பிள் நிறுவனம் 12.9 இன்ச் திரை கொண்ட ஐபேட் கருவியை உருவாக்கி வருவதாக கூறப்படும் நிலையில் இந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த கருவி வெளியாகலாம் என்று சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

எச்டிசி

எச்டிசி

வைவ் என்றழைக்கப்படும் எச்டிசி நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியால்டி ஹெட்போன்கள் இந்தாண்டின் இறுதியில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் பெரும்பாலும் இந்த கருவி மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் வெளியிடப்படும் என்றே தெரிகின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Following are the list of Hottest Gadgets Set To Launch In 2015. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X